உரக் கடைகளில் யூரியா வழங்க மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உரக் கடைகளில் யூரியா வழங்க மறுப்பு

Added : நவ 15, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் உரக்கடைகளில் வேறு உரங்களை வாங்கினால் மட்டுமே யூரியா வழங்குவதாகவும், ஒரிஜினல் ஆதார் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்புவதாகவும்விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.உரத்தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், வேளாண் துறை சார்பில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடுமையான உரத்தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகளுக்கு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் உரக்கடைகளில் வேறு உரங்களை வாங்கினால் மட்டுமே யூரியா வழங்குவதாகவும், ஒரிஜினல் ஆதார் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்புவதாகவும்விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உரத்தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், வேளாண் துறை சார்பில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடுமையான உரத்தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகளுக்கு தற்போதைய நிலையில் யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லை.தனியார் உரக்கடைகளுக்கு செல்லும் சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு யூரியா உரம் வழங்க மறுக்கின்றனர். அதே நேரம் காம்ளக்ஸ் உள்ளிட்ட வேறு உரங்களையும் வாங்க வற்புறுத்துகின்றனர்.வேறு உரம் தேவைப்படாத நிலையில் யூரியா மட்டும் வழங்க மறுக்கின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த நிலை தான் உள்ளது. மேலும் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள சில உரக்கடைகளில் விவசாயிகளின் ஆதார் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்புவதாக குற்றம்சாட்டுகின்றனர்.இந்த கார்டை பயன்படுத்தி அதிக உரம் தேவைப்படும் பெரிய விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு உரங்களை விற்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X