பொது செய்தி

தமிழ்நாடு

3 ஆண்டு பணிபுரிபவர்களை மாற்ற அரசு  அலுவலர்கள் வலியுறுத்தல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சோமசுந்தரம்,பொருளாளர் விஜயகுமார், நிர்வாகிகள் முனீஸ்பிரபு, வைரவன் கொண்ட குழுவினர் கலெக்டர் சங்கர்லால் குவாத் இடம் கோரிக்கை மனு அளித்துஉள்ளனர். இதில், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிதுறையில் துணை பி.டி.ஓ., உதவியாளர் பணி நிலைகளில் மூன்று ஆண்டுகளுக்கும்

ராமநாதபுரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சோமசுந்தரம்,பொருளாளர் விஜயகுமார், நிர்வாகிகள் முனீஸ்பிரபு, வைரவன் கொண்ட குழுவினர் கலெக்டர் சங்கர்லால் குவாத் இடம் கோரிக்கை மனு அளித்துஉள்ளனர்.

இதில், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சிதுறையில் துணை பி.டி.ஓ., உதவியாளர் பணி நிலைகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர்.இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.நிர்வாக ரீதியாக தேக்க நிலையும் உள்ளது. ஆகவே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பணி நிலையில் வேலை செய்பவர்களுக்கு உடன் பணி மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X