வயல்களில் புகுந்த நீர் ; விவசாயிகள் கவலை | Dinamalar

தமிழ்நாடு

வயல்களில் புகுந்த நீர் ; விவசாயிகள் கவலை

Added : நவ 15, 2021
Share
மானாமதுரை : மானாமதுரை அருகே கட்டிக்குளம் கண்மாய்க்கு கால்வாயில் இருந்து செல்லும் நீர் வெளியேறி பெரும்பச்சேரி வயல்களில் புகுந்ததால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, தென்னை சேதமடைந்தது. விவசாயிகள் கவலை க்குள்ளாகி வருகின்றனர்.கட்டிக்குளம் கண்மாய் மூலம் பெரும்பச்சேரி,மேட்டுமடை,கட்டிகுளம் உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய்க்கு வைகை

மானாமதுரை : மானாமதுரை அருகே கட்டிக்குளம் கண்மாய்க்கு கால்வாயில் இருந்து செல்லும் நீர் வெளியேறி பெரும்பச்சேரி வயல்களில் புகுந்ததால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, தென்னை சேதமடைந்தது. விவசாயிகள் கவலை க்குள்ளாகி வருகின்றனர்.

கட்டிக்குளம் கண்மாய் மூலம் பெரும்பச்சேரி,மேட்டுமடை,கட்டிகுளம் உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கட்டிக்குளம் கண்மாய் மற்றும் கால்வாயை துார்வாராததால் கால்வாயில் வரும் தண்ணீர் பெரும்பச்சேரி வயல்களில் புகுந்ததால் அங்கு 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, தண்ணீரில் அழுகி வருவதால் விவசாயிகள் கவலைக்குள்ளாகி வருகின்றனர்.

இயற்கை விவசாயி சந்திரமோகன் 40, கூறுகையில்,கட்டிக்குளம் கண்மாய் துார் வார அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியும் துார் வாராததால் வந்த ரூ.1 கோடி நிதி திரும்பி சென்று விட்டது. இது போன்று கால்வாய்களும் துார் வாராததால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்வெளிகளுக்குள் சென்று வருகிறது.

பெரும்பச்சேரி கிராம வயல்களில் இயற்கை முறையில் 30 ஏக்கர் பரப்பளவில் நான் பயிரிட்டிருந்தகள்ளிமுடையான்,சீரக சம்பா ரக நெல் பயிர்களும் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன.இதே போன்று பெரும்பச்சேரியில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணரீல் மூழ்கியது. அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லைஆகவே மாவட்ட நிர்வாகம் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.படம் உள்ளது:எம்என்எம் 2 15-11-2021பெரும்பச்சேரியில் தண்ணீரில் மூழ்கியுள்ள பாரம்பரிய கள்ளிமுடையான் ரக நெற்பயிர்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X