தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 658 பேருக்கு பணி நியமன ஆணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 658 பேருக்கு பணி நியமன ஆணை

Added : நவ 15, 2021
Share
சிவகங்கை : சிவகங்கையில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 39 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. 1775 பேர் பங்கேற்றதில் 658 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் திட்டம்ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 39 முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு

சிவகங்கை : சிவகங்கையில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 39 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. 1775 பேர் பங்கேற்றதில் 658 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் திட்டம்ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 39 முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.இதில் எம்.எல்.ஏ.,க்கள் மானாமதுரை தமிழரசி, காரைக்குடி மாங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சித்தலைவர் மணிமுத்து, மகளிர் திட்ட அலுவலர் வானதி, உதவி திட்ட அலுவலர் விஷ்ணுபரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். வேலை வாய்ப்பற்ற 1775 பேர் வந்திருந்தனர். இதில் 658 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருட்கள் கண்காட்சியும் நடத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X