பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுய உதவி குழுக்களுக்குரூ.488 கோடி கடனுதவி இலக்கு; கலெக்டர் மதுசூதன் ரெட்டி தகவல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 488 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 230 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் நகர்புறத்தை போல், கிராமப்புறங்களில் மகளிர் முன்னேற்றம் பெற வேண்டும், என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 488 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 230 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் நகர்புறத்தை போல், கிராமப்புறங்களில் மகளிர் முன்னேற்றம் பெற வேண்டும், என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின்னர் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் எந்தவகையான தொழில் மையங்களை உருவாக்கினால் வெற்றி பெற முடியும். இதன் மூலம் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட முடியும், என்பதை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கி கடன் அனைத்தும் திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் மகளிர் குழுக்கள் ஒருங்கிணைந்து கைத்தறி நுாற்பாலை மற்றும் கார்மென்ட்ஸ் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X