விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Added : நவ 15, 2021
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 21விடுதிகள், மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யில் பயிலும் மாணவர்களுக்கு 5,

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 21விடுதிகள், மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யில் பயிலும் மாணவர்களுக்கு 5, மாணவிகளுக்கு 5 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.பள்ளி விடுதிகளில் 4 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களும், கல்லுாரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், காப்பாளர் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

தங்கள் இருப்பிடத்திற்கும், கல்வி கற்க செல்லும் நிலையத்திற்கும் இடையே 8 கி.மீ., துாரம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம் இலவசமாக வழங்கப்படும். 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டிநுால்கள் வழங்கப்படும். இதில் அனைத்து பிரிவு மாணவர்களும் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நவ., 22 க்குள் அந்தந்த விடுதி காப்பாளரிடமோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் வழங்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X