பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பிய கண்மாய் ; கொண்டாடிய விவசாயிகள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதை ஒட்டி விவசாயிகள் கிடாவெட்டி விருந்து வைத்தனர்.திருப்பாச்சேத்தியில் வடக்கு மற்றும் தெற்கு என இரு கண்மாய்கள் உள்ளன. இதில் 300ஏக்கர் பரப்பளவுள்ள வடக்கு கண்மாயை நம்பி 900 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீண்ட வருடம் கழித்து கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதை ஒட்டி விவசாயிகள் கலுங்கின் முன்

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதை ஒட்டி விவசாயிகள் கிடாவெட்டி விருந்து வைத்தனர்.

திருப்பாச்சேத்தியில் வடக்கு மற்றும் தெற்கு என இரு கண்மாய்கள் உள்ளன. இதில் 300ஏக்கர் பரப்பளவுள்ள வடக்கு கண்மாயை நம்பி 900 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீண்ட வருடம் கழித்து கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதை ஒட்டி விவசாயிகள் கலுங்கின் முன் கிடாவெட்டி சாமி கும்பிட்டு விருந்து வைத்தனர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.விவசாயிகள் தரப்பில்கூறுகையில்; நீண்ட வருடம் கழித்து கண்மாய் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயம் செழிப்படைவதுடன் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயரும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X