சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

நடந்ததை எண்ணி கவலைப்பட கூடாது!

Updated : நவ 17, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
முடக்குவாதத்தால், 12 வயதில் பாதிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லுாரி மற்றும் முனைவர் ஆய்வு பட்டப் படிப்பு களை முடித்து, இந்திய பொருளாதார பணியான, ஐ.இ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தமிழ் வீணா: பள்ளிப்பருவத்தில் நடனத்தில் மிகுதியான ஆர்வம் கொண்டிருந்தேன். 2004 ஜனவரி 16அன்று, ஐந்தரை மணி நேரம் பரதம் ஆடினேன். அதை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று,
சொல்கிறார்கள்


முடக்குவாதத்தால், 12 வயதில் பாதிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லுாரி மற்றும் முனைவர் ஆய்வு பட்டப் படிப்பு களை முடித்து, இந்திய பொருளாதார பணியான, ஐ.இ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தமிழ் வீணா: பள்ளிப்பருவத்தில் நடனத்தில் மிகுதியான ஆர்வம் கொண்டிருந்தேன். 2004 ஜனவரி 16அன்று, ஐந்தரை மணி நேரம் பரதம் ஆடினேன். அதை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று, கொடியேற்றும் விழாவிலும் நடனம் ஆடினேன்.

அதன்பின் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பள்ளிக்கு போக முடியாத அளவுக்கு கை, கால், இடுப்பு மூட்டுகளில் கடுமையான வலி ஏற்பட்டது. பல்வேறு பரிசோதனைகளுக்கு பின், இளம்பிள்ளை முடக்குவாதம் இருந்ததை உறுதி செய்தனர், மருத்துவர்கள். உற்சாகமாய் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் பெரும் சோகம் தொற்றிக் கொண்டது. அப்போதெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு வலி இருக்கும். வலி நிவாரணியை எடுத்துக் கொண்டாலும், சிறிது நேரம் மட்டுமே கேட்கும்.

எதிர்பாராத ஒன்று நடந்து விட்டது என்றால், அதையே யோசித்தபடியே கவலைப்பட்டு கொண்டு இருக்க கூடாது. இதைத் தான் என் வாழ்விலும் எடுத்துக் கொண்டேன். இது வரை, ஐந்து முறை அறுவை சிகிச்சைகள் எனக்கு நடந்துள்ளன. அதன் பின், இப்போது மெல்ல நடக்க துவங்கி இருக்கிறேன்.உடல் வலியை மருந்துகளோடு சண்டை செய்ய விட்டு விட்டு, படிப்பில் கவனம் செலுத்த துவங்கினேன். 10ம் வகுப்பு தேர்வை உதவியாளர் மூலம் எழுதி, 438 மதிப்பெண், பிளஸ் 2தேர்வில் 1,139 மதிப்பெண் எடுத்தேன்

.பி.ஏ., - எம்.ஏ., என இரண்டு பட்டப்படிப்பிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்றேன். மேலும், எங்கள் பல்கலையில் சுகாதாரப் பொருளியல் என்ற தலைப்பில் முனைவர் ஆய்வு பட்டத்தையும் சமீபத்தில் தான் முடித்து உள்ளேன்.இந்திய பொருளாதார பணியான, ஐ.இ.எஸ்., தேர்வை இரண்டு முறை எழுதினேன். மூன்றாவது முறை நிச்சயம் வெற்றி பெறுவேன்.'அசோஷியேஷன் ஆப் எக்கானமிஸ்ட் தமிழ்நாடு' என்ற அமைப்பில், சிறந்த கட்டுரையாக என் ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டு, முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரங்கராஜன் கையால் விருதையும் பெற்றிருக்கிறேன்.

எளிமையாக பொருளாதார பாடத்தை விளக்குவதற்காக, 'ஸ்கூல் எக்கனாமிக்ஸ்' என்ற பெயரில் கடந்த ஓராண்டுக்கு முன், 'யுடியூப்' சமூகவலைதள சேனலை துவங்கிஇருக்கிறேன். பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி மற்றும் சி.பி.எஸ்.இ., மாணவர்கள், பி.எஸ்சி., யு.பி.எஸ்.சி., படிக்கும் மாணவர்களுக்கும் பயன்படுகிறது!

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
15-நவ-202118:42:22 IST Report Abuse
மலரின் மகள் சிறப்புக்கள். இறைவனின் அனுக்கிரகம் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். உங்களது யு டியூப் சேலை நிச்சயம் பார்ப்பேன் மற்றவர்களையும் பார்க்கச்சொல்வேன். பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நிருவாகத்தினர் இந்த செய்தியை படித்து இவரை அழைத்து தங்கள் மாணவர்களுடன் உரையாட சொல்லலாம். எப்படி சாதிக்கிறேன், பிரச்சினைகள் எப்படி வந்தது, அதற்கு நான் செய்தது என்ன, தியாகங்கள் எப்படி, உதவியது யார், எல்லாவற்றிற்கும் மேலாக தானாக எப்படி உந்து சக்தியை வெளிப்படுத்தி கொண்டார். அந்த சக்தி மேலும் மேலும் பரிணமிக்க அவரின் உள்ளுணர்வில் உந்துதல்கள் எப்படி உருவாகின்றன என்று இவர் சொல்ல மாணவிகள் கேட்டால், நிச்சயம் நமது மாணவ தலைமுறை தங்களின் போக்கில் விளையாட்டு தானத்தில் சீரியசின்மையை போக்கி சாதிப்போம் நிச்சயமாக என்று எண்ணம் கொள்வர். மாணவ பருவத்தில் அவர்களுக்கு கல்வியுடன் வேண்டிய முக்கிய பண்பு சாதிப்போம் என்ற நம்பிக்கைதான். தன்னமிபிக்கை இல்லாத நிலையே மிகப்பெரிய ஹேண்டிகேப் என்று நான் மற்றவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு சொல்வேன், பள்ளி கல்லூரி மாணவிகளுடன் உரையாடுவது நமது சாதனையின் மகுடமாக சாதித்ததை மகிழ்ச்சியாக ஏற்பதாக இருக்கும் ஒரு நிலை. அது உங்களுக்கும் தேவை பெண்ணே. என்போன்றோரின் பிரார்த்தனைகளின் பழங்கள் உன்போன்றோருக்கும் உரித்ததாகும். நல்லவர்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்பார்கள் அந்த அனைவர் என்பதில் உங்களை போன்றோர் தான் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
nannari - delhi,இந்தியா
15-நவ-202112:00:30 IST Report Abuse
nannari சூப்பர்...தொடர்ந்து முன்னரே வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X