பொது செய்தி

தமிழ்நாடு

கமுதி அருகே சொட்டுநீர் பாசனத்தில் புதிய ரக நெல்  நடவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கமுதி : கமுதி அருகே இயற்கை விவசாயி ராமர் சொட்டுநீர் பாசனத்தில் புதிய ரக நெல் நடவு செய்துள்ளார்.கோரபள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமர் பல ஆண்டுகளாகவே விவசாயத்திற்கு சொட்டு நீர்,இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். தற்போது புதியரக நெற்பயிரான அக்சய பொன்னி ரக நெல்லை நடவு செய்துள்ளார்.உதவி வேளாண்மை இயக்குனர் கெர்சோன் தங்கராஜ் ஆய்வு செய்தார்.இயற்கை

கமுதி : கமுதி அருகே இயற்கை விவசாயி ராமர் சொட்டுநீர் பாசனத்தில் புதிய ரக நெல் நடவு செய்துள்ளார்.

கோரபள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமர் பல ஆண்டுகளாகவே விவசாயத்திற்கு சொட்டு நீர்,இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். தற்போது புதியரக நெற்பயிரான அக்சய பொன்னி ரக நெல்லை நடவு செய்துள்ளார்.உதவி வேளாண்மை இயக்குனர் கெர்சோன் தங்கராஜ் ஆய்வு செய்தார்.இயற்கை விவசாயி ராமர் கூறியதாவது:மற்ற நெல் ரகங்களை விட மூன்று மடங்கு லாபம் தரக்கூடிய அக்சய பொன்னி நடவு செய்துஉள்ளேன்.

ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரம் விலை கிடைக்கும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக கமுதி வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆலோசனை பெற்று சோதனை அடிப்படையில் 100 சதவீதம் சொட்டுநீர் பாசனத் தில் அரை ஏக்கரில் புதிய ரக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. வரும்காலத்தில் கூடுதல்லாபம் கிடைத்தால் புதியரக நெல் முழுவதும் பயன்படுத்தி விவசாயம் செய்யப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X