சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தவறுகளில் இருந்து கற்ற பாடம்!

Updated : நவ 17, 2021 | Added : நவ 15, 2021
Share
Advertisement
'பதவியைக் காப்பாற்றுவதில் ரொம்பவே உஷாராகத் தான் இருக்கிறார்' என, குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பூபேந்திர படேலைப் பற்றி கூறுகின்றனர், அந்த மாநில அரசியல்வாதிகள். குஜராத்தில் இவருக்கு முன் முதல்வராக இருந்த விஜய் ரூபானியின் பதவி, செப்டம்பரில் அதிரடியாக பறிக்கப்பட்டது. இவர் மட்டுமல்லாமல், இவரது அமைச்சரவையில் இருந்த எல்லாருடைய பதவியும் கூண்டோடு காலியானது.
அக்கம் பக்கம்

'பதவியைக் காப்பாற்றுவதில் ரொம்பவே உஷாராகத் தான் இருக்கிறார்' என, குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான பூபேந்திர படேலைப் பற்றி கூறுகின்றனர், அந்த மாநில அரசியல்வாதிகள்.

குஜராத்தில் இவருக்கு முன் முதல்வராக இருந்த விஜய் ரூபானியின் பதவி, செப்டம்பரில் அதிரடியாக பறிக்கப்பட்டது. இவர் மட்டுமல்லாமல், இவரது அமைச்சரவையில் இருந்த எல்லாருடைய பதவியும் கூண்டோடு காலியானது. தற்போது பூபேந்திர படேல் அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவருமே புதுமுகங்கள். விஜய் ரூபானியின் பதவி பறிக்கப்பட்டதற்கு பலவிதமான காரணங்களை கூறுகின்றனர்.

ஆனால், அவர் எடுத்த சில அதிரடி முடிவுகள் தான் இதற்கு காரணம் என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள்.புதிய திட்டங்களை செயல்படுத்துவது, முடிவுகளை அறிவிப்பது போன்ற விஷயங்களை உடனுக்குடன் அதிரடியாக அறிவித்து விடுவார் விஜய் ரூபானி. அதன் தாக்கம் பற்றி அவர் யோசிப்பதே இல்லை. இப்படி உடனுக்குடன் எடுக்கப்பட்ட முடிவுகள் பல நேரங்களில், விஷப் பரீட்சையில் முடிந்துள்ளன. இதனால் தான் அவரது பதவி பறிக்கப்பட்டதாக ஒரு தகவலும் உலா வருகிறது.

இது குறித்த தகவல் அறிந்த பூபேந்திர படேல், எந்த திட்டமாக இருந்தாலும் பொறுமையாக ஆலோசித்த பின் தான், முடிவுகளை அறிவிக்கிறார். அதற்கு எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை என்கிறார்.

இது பற்றி அமைச்சர்கள் சிலர் கேட்டபோது, 'முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை என்றால் நம் பதவியும் பறிபோய் விடும்; பரவாயில்லையா...' என கண் சிமிட்டுகிறார் பூபேந்திர படேல்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X