பொது செய்தி

தமிழ்நாடு

8 ம் கட்ட சிறப்பு முகாமில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Added : நவ 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 8 ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் 8 ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 650 இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் நடந்தது. 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 830 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 8 ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 8 ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 650 இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் நடந்தது. 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 830 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மருந்துகள் கையிருப்பில் இருந்தது. வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்து முகாம்களுக்குவருகை தர முடியாதவர்களுக்காக நுாறு நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 755 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தவணையாக 3 லட்சத்து 30 ஆயிரத்து 125 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 10 லட்சத்து 86 ஆயிரத்து 880 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுகாதராத்துறை துணை இயக்குநர் ராம்கணேஷ் தெரிவித்ததாவது: நேற்று மாலை 5:00 மணி வரை 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முகாம் நிறைவு பெற நேரம் இருப்பதால் மேலும் 3 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி போட வாய்ப்புள்ளது, என்றார். இந் நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் நெவன்பாபு, பார்த்தசாரதி, கலாதேவி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X