தமிழ்நாடு

டைம் கீப்பர்களுக்கு குறைந்தபட்ச கூலி கூட கிடைக்காத அவல நிலை

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்யும் டைம் கீப்பர்களுக்கு குறைந்தபட்ச கூலி கூட கிடைக்காத அவல நிலை தொடர்கிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 1972ல் துவங்கப்பட்டது. தற்போது சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திருநெல்வேலி, மாநில விரைவு போக்குவரத்து கழகம் எட்டு

ராமநாதபுரம் : தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்யும் டைம் கீப்பர்களுக்கு குறைந்தபட்ச கூலி கூட கிடைக்காத அவல நிலை தொடர்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 1972ல் துவங்கப்பட்டது. தற்போது சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திருநெல்வேலி, மாநில விரைவு போக்குவரத்து கழகம் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இதில் கும்பகோணம் மண்டலம் தென்னிந்தியாவில் பெரியது. இது பத்து மாவட்டங்களை உள்ளடக்கியது. எட்டு மண்டலங்களிலும் 1.30 லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.

பஸ் ஸ்டாண்ட்களில் பயணிகளை அழைத்து குறிப்பிட்ட ஊருக்கான பஸ் புறப்படும் நேரங்களை சொல்லி ஏற்றிவிடும் பணிகளை டைம்கீப்பர்கள் செய்கின்றனர்.இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் 4000 பேருக்கும் மேல் டைம் கீப்பர்களாக உள்ளனர். தற்காலிக பணியாளர்களான இவர்களுக்கு ஒரு பஸ்சுக்கு ரூ.2 வீதம் அனுமதிக்கப்படுகிறது. இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை மட்டுமே கிடைக்கிறது.

மாநகர் பஸ்ஸ்டாண்ட்களில் பஸ்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இங்கு அதற்கேற்ப கூடுதலான டைம் கீப்பர்கள் இருப்பதால் கிடைக்கும் தொகையும் குறைகிறது. ஒரு பஸ்சுக்கு ரூ.2 வழங்குவதால் இவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டைம்கீப்பர் ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின் ஊதிய சட்டம் 2019ன் படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்ச கூலியாக ரூ.375 வழங்க வேண்டும்,என கூறப்பட்டுள்ளது. அதன்படி மாதம்(26 நாட்கள்) ரூ.9750 ரூபாய் வழங்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

ஆனால் செயல்படுத்தப்படவில்லை.நாங்கள் ஒரு நாளைக்கு ரூ.80 ரூபாய்க்கு 8:00 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்கிறோம். எங்களை நம்பி குடும்பம் உள்ளது. இன்றைய விலைவாசி உயர்வில் ரூ.80 சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும். மேலும் பல நேரங்களில் பஸ்களில் கண்டக்டர்கள் பணம் தராமல் கூட சென்றுவிடுவது உண்டு, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X