பொது செய்தி

தமிழ்நாடு

தீவனங்களை உடனடியாக வழங்க கோரிக்கை

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெரியபட்டினம் : கால்நடை வளர்க்கக்கூடிய விவசாயிகளுக்கு மழை காலங்களில் கால்நடைத் துறை மூலமாக வழங்கக்கூடிய பொருட்களான தீவனப்பயிர்கள், விதைகளை வழங்கிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வண்ணாங்குண்டு விவசாயிகள் கூறியதாவது:வண்ணாங்குண்டு அரசு கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் தீவனப்பயிர்கள், சோளம், கட்டைபுல், குவாப்புல்

பெரியபட்டினம் : கால்நடை வளர்க்கக்கூடிய விவசாயிகளுக்கு மழை காலங்களில் கால்நடைத் துறை மூலமாக வழங்கக்கூடிய பொருட்களான தீவனப்பயிர்கள், விதைகளை வழங்கிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வண்ணாங்குண்டு விவசாயிகள் கூறியதாவது:

வண்ணாங்குண்டு அரசு கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் தீவனப்பயிர்கள், சோளம், கட்டைபுல், குவாப்புல் உள்ளிட்டவைகளை வழங்குவது வழக்கம்.இதுவரை எந்த விநியோகம் செய்யாமல் உள்ளனர். காலை 8:30 மணிக்கு திறக்கப்பட வேண்டிய கால்நடை மருத்துவமனை தாமதமாக10:00 மணிக்கு மேல் திறப்பதால் விவசாயிகளுக்கு பலன் இல்லாமல் உள்ளது.மழை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.குறைகளை நிவர்த்தி செய்ய கால்நடைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X