பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் சேதம்; ஆய்வு அதிகாரிகள் திரும்பினர்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : பாம்பன் பாலம் சேதமடைந்து அதிர்வு ஏற்பட்டது. அப்பகுதியை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.பாம்பனில் கடல் மீது அமைக்கப்பட்ட பாலத்தின் நடுவில் உள்ள பிங்கர் ஜாய்ன்ட் இரும்பு பிளேட் கடந்த சில நாட்களுக்கு முன் சேதமடைந்து அதிர்வு ஏற்பட்டது. நவ.,8ல் தினமலரில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக நேற்று பாலத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலை

ராமேஸ்வரம் : பாம்பன் பாலம் சேதமடைந்து அதிர்வு ஏற்பட்டது. அப்பகுதியை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பாம்பனில் கடல் மீது அமைக்கப்பட்ட பாலத்தின் நடுவில் உள்ள பிங்கர் ஜாய்ன்ட் இரும்பு பிளேட் கடந்த சில நாட்களுக்கு முன் சேதமடைந்து அதிர்வு ஏற்பட்டது. நவ.,8ல் தினமலரில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக நேற்று பாலத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலை பொறியாளர், ராமநாதபுரம் உதவி பொறியாளர் மகேஸ்வரி, ஜூனியர்பொறியாளர் ரவீந்திரன் ஆகியோர் சேதமடைந்த இரும்பு பிளேட், அதிர்வு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர்.பின்னர் பாலத்தின் கீழ்பகுதிக்கு செல்ல முடிவு செய்த அதிகாரிகள், சாலையில் உள்ள இரும்பு மூடியை மண் அள்ளும் இயந்திரம் மூலம் திறக்க முயன்றும், திறக்க முடியவில்லை. இதனால் பாலத்தை முழுமையாகஆய்வு செய்யாமல் அதிகாரிகள் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X