பொது செய்தி

தமிழ்நாடு

மாசில்லா விருதுநகர்... பசுமை சூழலை காக்கும் ஆட்டோ டிரைவர்

Added : நவ 15, 2021
Share
Advertisement
விருதுநகர் : இயற்கையை நாம் செழிக்க வைத்தால் அது நமக்கு அள்ள அள்ள குறையாத அமிர்தத்தை தந்து கொண்டே இருக்கும். உதாரணமாக துாய காற்று, நீர், இதமான சூழல். இப்போது நம் மேல் பெய்யும் மழை துளிக்காக எத்தனை மரங்கள் வெயிலில் வாடி கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கின என யாருக்கும் தெரியாது. இதுவும் ஒரு வகையில் தியாகம் தான். மரத்தின் தவத்தால் தான் நாம் மழையை பெறுகிறோம். அந்த மழை மீண்டும்
 மாசில்லா விருதுநகர்... பசுமை சூழலை காக்கும் ஆட்டோ டிரைவர்

விருதுநகர் : இயற்கையை நாம் செழிக்க வைத்தால் அது நமக்கு அள்ள அள்ள குறையாத அமிர்தத்தை தந்து கொண்டே இருக்கும். உதாரணமாக துாய காற்று, நீர், இதமான சூழல். இப்போது நம் மேல் பெய்யும் மழை துளிக்காக எத்தனை மரங்கள் வெயிலில் வாடி கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கின என யாருக்கும் தெரியாது. இதுவும் ஒரு வகையில் தியாகம் தான். மரத்தின் தவத்தால் தான் நாம் மழையை பெறுகிறோம்.

அந்த மழை மீண்டும் மரங்களை குளிர்வித்து பசுமையாக்குகிறது. இயற்கையின் ஒவ்வொரு செயலிலும் ஒரு அர்த்தம் பொதிந்துள்ளது. இத்தகைய மரங்களின் தியாக உணர்வை புரிந்த பலர் தாங்களாக மரம் வளர்க்கின்றனர். தன்னார்வலர்களாகி பிறரையும் மரம் நட துாண்டுகின்றனர். அந்த வகையில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவராக உள்ள நாகராஜன் அழகு தோட்டங்களால் ரயில்வே ஸ்டேஷனையே இயற்கை காற்றின் புகலிடமாக மாற்றி உள்ளார். ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகள், செடிகளை நட்டு பராமரித்து வருகிறார்.

ரயில்வே நிர்வாகம் இவரது செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 'மரம், செடிகளை பராமரிப்பவர்: நாகராஜன்' என பெயர் பலகை வைத்துள்ளது. 2016 முதல் இப்பணியை செய்து வரும் இவர் மரங்களுடனே அதிக நேரம் செலவிடுகிறார். மரம் நடவு போக காலை, மாலை நேரங்களில் நீர் பாய்ச்சுவது, களை பறிப்பது, அதிகம் வளர்ந்த செடிகளை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். இதற்காக எவ்வித பணமும் பெற்றதில்லை. ரயில்வே அதிகாரிகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்கின்றனர். தற்போது விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி பசுமை சூழலுடன் அருமையாக காட்சி தருகிறது. ஆட்டோ டிரைவர் நாகராஜன், ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடுகளை இயற்கை ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இயற்கை சூழலாக உள்ளது2016ல் இவரது சேவையை பாராட்டி அப்போதைய மதுரை டி.ஆர்.எம்., ஆக இருந்த நீனு இட்டியரா நாகராஜன் பெயர் பலகையை வைக்க கூறினார். பொதுமக்கள், பயணிகள் டீ, கப் போன்றவற்றை தோட்டங்களில் வீசாதீர்கள். ரயில்வே ஸ்டேஷன் இயற்கை சூழலாக உள்ளது.

பலர் தானாக முன்வந்து செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர். மரங்களின் மகத்துவம் அறிந்து அனைவரும் தங்கள் வீட்டின் சிறு பகுதியிலாவது மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.வி.சண்முகம், நிலைய மேலாளர், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்.இதயம், நுரையீரல் பலப்படும்மரம் வளர்ப்பதற்கும், பூங்கா பராமரிப்புக்கும் ரயில்வே நிலைய மேலாளர் சண்முகம், பொறியாளர் மைதீன் பாட்சா மிகவும் உதவியாக இருக்கின்றனர்.

கருநொச்சி, நந்தியாவட்டை, மகாவில்வம், புன்னைமரம், நாகலிங்கம் உள்ளிட்ட மூலிகை மரங்களையும் வைத்துள்ளேன். இவை நுரையீரல், இதயத்தை பலப்படுத்துகின்றன. இவ்வழியாக தினசரி நிறைய பேர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மரங்களை பராமரிக்கும் பணியின் போது சில நேரங்களில் சவாரியை கூட இழந்திருக்கிறேன். ஆனால் சவாரியை விட இயற்கை சூழலே முக்கியம் என கருதுகிறேன்.நாகராஜன், ஆட்டோ டிரைவர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X