கீழக்கரையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கீழக்கரையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

Added : நவ 15, 2021
Share
கீழக்கரை : கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் பலர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 20 தினங்களுக்கும் மேலாக ஏராளமானோர் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாத் துணைத் தலைவர் அஜிகர் கூறியதாவது:சமீபத்தில் பெய்த தொடர் மழையால் ஏராளமானோர் சளி, இருமல்உள்ளிட்ட காய்ச்சலால் அவதிப்பட்டு வரும்

கீழக்கரை : கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் பலர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 20 தினங்களுக்கும் மேலாக ஏராளமானோர் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாத் துணைத் தலைவர் அஜிகர் கூறியதாவது:சமீபத்தில் பெய்த தொடர் மழையால் ஏராளமானோர் சளி, இருமல்உள்ளிட்ட காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு 20 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமித்து டெங்கு காய்ச்சல் சிகிச்சை பிரிவை உடனடியாக தொடங்க வேண்டும்.கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் தெருக்களில் கொசு மருந்து அடித்தும் கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருக்கும் நீரை உடனடி அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X