பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்க

Added : நவ 15, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்திக்குறிப்பு: தற்போது உள்ள சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிர தாக்கத்தால் மழை பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருப்புக்கோட்டை நகராட்சி குடிநீர் விநியோகம் செய்வதற்கான பம்பிங் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மக்கள்

அருப்புக்கோட்டை : வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்திக்குறிப்பு: தற்போது உள்ள சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிர தாக்கத்தால் மழை பொழிவு அதிகமாக உள்ளது.

இதனால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருப்புக்கோட்டை நகராட்சி குடிநீர் விநியோகம் செய்வதற்கான பம்பிங் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மக்கள் குடிநீரை தேவைக்கு ஏற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடியிருப்பை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். மழை காலங்களில் ஏற்படும் நோய்களான காய்ச்சல், தும்மல், வயிற்றுப்போக்கு, தோல் எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அருகில் உள்ள நகர் நல மையம் அல்லது அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின் பயன்படுத்த வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X