தமிழ்நாடு

செயற்கைக்கு பதில் இயற்கை உரம் இடலாமே; மனித, மண் வளம் காப்பாற்ற முன்வருவோம்; மாத்தி யோசிங்க...

Added : நவ 15, 2021
Share
Advertisement
நரிக்குடி : பயிர்களுக்கு செயற்கை உரங்களை பயன்படுத்தி வருவதால் மனித, மண் வளம் கெட்டு ஆரோக்கியமற்ற சூழல் உருவாகிறது. விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி, நெல் நடவில் விவசாயிகள் சுறுசுறுப்பாக உள்ளனர். நடவுக்கு பின் உரமிட்டால் பயிர்கள் வளர்ந்து பால் பிடிக்கும்

நரிக்குடி : பயிர்களுக்கு செயற்கை உரங்களை பயன்படுத்தி வருவதால் மனித, மண் வளம் கெட்டு ஆரோக்கியமற்ற சூழல் உருவாகிறது. விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி, நெல் நடவில் விவசாயிகள் சுறுசுறுப்பாக உள்ளனர். நடவுக்கு பின் உரமிட்டால் பயிர்கள் வளர்ந்து பால் பிடிக்கும் என்பதால் உரத்திற்காக விவசாயிகள் அலையோ அலை என அலைகின்றனர். பல இடங்களில் உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நீண்ட வரிசையிலும் டோக்கன் வாங்கியும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு காத்திருந்து வாங்கும் செயற்கை உரத்தால் மண் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு மனித வளத்திற்கு அச்சுறுத்தல் தான் ஏற்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன் இயற்கை உரத்தின் மூலம் உணவு தானியங்களை உற்பத்தி செய்த மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

ஆனால் தற்போது ஆரோக்கிய சூழல் முற்றிலும் மாறுபட்டு இருப்பதால் இயற்கை உரத்தின் பயன்பாடு மீண்டும் அத்தியாவசியம் ஆகியுள்ளது. இதிலிருந்து விடுபட முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை உரத்தின் மூலம் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் மாற்றி யோசிக்க வேண்டும்.


பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்


செயற்கை உரத்தால் எவ்வளவு பாதிப்பு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது உள்ள சூழ்நிலையில் இயற்கை உரத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சகவ்யா, கோமியம் உள்ளிட்ட எத்தனையோ முறைகளில் இயற்கை உரத்தை விவசாயிகளால் தயாரிக்க முடியும். உடனடியாக செயற்கை உரத்தில் இருந்து இயற்கை உரத்திற்கு மாறாவிட்டாலும் மெல்ல மெல்ல மாற வேண்டும். கூட்டுறவுகளில் இயற்கை உரங்கள் விற்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
- சாய்குமார், சமூக ஆர்வலர், உலக்குடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X