சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வெளிச்சத்திற்கு வருமா ஊழல்கள்?

Updated : நவ 17, 2021 | Added : நவ 15, 2021
Share
Advertisement
''அதிகாரிகள் ஆய்வு நடத்துனதை ஏனுங்க மறைக்கோணும்...'' என்றபடி பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''அப்படியா... என்ன விஷயமுன்னு தெளிவா சொல்லும் ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா. ''மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலர் சுனில் குமார், இணை செயலர் சேத்தி ஆகியோர், கோவை மாவட்டம் ஓடந்துறையில இருக்குற, 'சோலார்' மின் உற்பத்தி, காற்று மின் உற்பத்தி திட்டங்களை சமீபத்துல
டீ கடை பெஞ்ச்

''அதிகாரிகள் ஆய்வு நடத்துனதை ஏனுங்க மறைக்கோணும்...'' என்றபடி பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

''அப்படியா... என்ன விஷயமுன்னு தெளிவா சொல்லும் ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.

''மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலர் சுனில் குமார், இணை செயலர் சேத்தி ஆகியோர், கோவை மாவட்டம் ஓடந்துறையில இருக்குற, 'சோலார்' மின் உற்பத்தி, காற்று மின் உற்பத்தி திட்டங்களை சமீபத்துல ஆய்வு செஞ்சாங்க...

''தகவல் தெரிஞ்சு, ஓடந்துறைக்கு போன நிருபர்களிடம், 'செய்தி எதுவும் கிடையாது'ன்னு சொல்லி, விரட்டாத குறையாக அதிகாரிகள் திருப்பி அனுப்பிட்டாங்க...

''மறுநாள் அதிகாரிகள் இருவரும் பங்கேற்ற, 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' என்ற மத்திய அரசின் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்துல நடந்துச்சுங்க...

''இதை பத்தியும், அரசு தரப்புல இருந்து எந்த தகவலையும் வெளியிடலை... ஏதோ பிரச்னை இருக்கு... அதனால தான் கமுக்கமாக மூடி மறைக்க பார்க்குறாங்கன்னு, மாவட்ட நிர்வாகிகள் பேசிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''ஆளுங்கட்சியினர் மிரட்டலுக்கு அதிகாரிகள் பயப்படுறாங்களாம் பா...'' என்ற அன்வர்பாய் மேலும் தொடர்ந்தார்...

''மதுரை மாவட்டத்துல இருக்கற, 10 சட்டசபை தொகுதிகள்ல, ஐந்தில் அ.தி.மு.க., ஜெயிச்சது... இதனால ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் மோதல் அதிகமா இருக்கு பா...

''கொஞ்ச நாளைக்கு முன்னாடி தேனி அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத்குமார், உசிலம்பட்டியில தன் தொகுதி மேம்பாட்டு நிதியில நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துவக்கி வைச்சாரு பா...
''இதுல அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அய்யப்பன், 'மாஜி' அமைச்சர் உதயகுமார் எல்லாம் கலந்துக்கிட்டாங்க பா...

''ஆனா இந்த விழாவுக்கு போகக் கூடாதுன்னு, ஆளுங்கட்சியினர் மிரட்டுனதால ஒன்றிய, ஊராட்சி அதிகாரிகள் யாரும், அந்த பக்கமே எட்டி பார்க்கலை பா... ''வேறு வழியில்லாம, அதிகாரிகள் யாருமே இல்லாமல், அந்த திட்டங்களை இவங்க மட்டும் துவக்கி வைச்சிருக்காங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.

''என்னங்க திடுதிப்புன்னு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல முறைகேடு நடந்துருக்கு... ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்போமுன்னு ஆளுங்கட்சி தரப்புல பாயறாளே... என்ன விஷயம் ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.

அதற்கு அண்ணாச்சி பதில் அளித்தார்...''ஓ அதுவா... கோவை மாநகராட்சியில, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல செஞ்ச வேலைக்கு பணம் விடுவிக்காம நிறுத்தி வச்சிருந்தாவ... பொறுத்துப் பார்த்த ஒப்பந்ததாரர்கள், டில்லிக்கு புகார் அனுப்பிட்டாவ வே...

''அங்கிருந்து, 'பணத்தை ஏன் விடுவிக்கலை, வேலையை ஏன் நிறுத்தி வச்சிருக்கீங்க'ன்னு, கேள்வி மேல கேள்வி கேட்டு, மாநில அதிகாரிகளை துளைச்சு எடுத்துருக்காவ... அதுக்கப்புறம், வேண்டா வெறுப்பா பணத்தை விடுவிச்சுருக்காவ வே...

''அதனால, அ.தி.மு.க., ஆட்சியில மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துனதுல முறைகேடு நடந்திருக்குன்னு சொன்ன குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை திரட்டிட்டு இருக்காவ வே...

''இதுல ஒரு பகுதியா தான், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல முறைகேடு நடந்திருக்குன்னு ஆளுங்கட்சி தரப்புல இருந்து, 'பிள்ளையார் சுழி' போட்டிருக்காவ...

''இனி ஊழல் விஷயங்கள் வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்துமுன்னு பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X