குறுகிய ரோடால் தொடரும் விபத்துக்கள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே குறுகிய ரோடால் தினசரி விபத்துக்கள் நடக்கின்றன. ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.அருப்புக்கோட்டை ஒன்றியம் ஆமணக்குநத்தம் ஊராட்சியை சேர்ந்தது ஆ.கல்லுப்பட்டி. அருப்புக்கோட்டை - ஆமணக்குநத்தம் வரையில் அகலமாக உள்ள ரோடு, ஆமணக்குநத்தம் - கல்லுப்பட்டி வரையுள்ள 1 கி.மீ., துாரம் உள்ள ரோடு குறுகலாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே குறுகிய ரோடால் தினசரி விபத்துக்கள் நடக்கின்றன. ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.

அருப்புக்கோட்டை ஒன்றியம் ஆமணக்குநத்தம் ஊராட்சியை சேர்ந்தது ஆ.கல்லுப்பட்டி. அருப்புக்கோட்டை - ஆமணக்குநத்தம் வரையில் அகலமாக உள்ள ரோடு, ஆமணக்குநத்தம் - கல்லுப்பட்டி வரையுள்ள 1 கி.மீ., துாரம் உள்ள ரோடு குறுகலாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. ஓரத்தில் ஓடை இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் திரும்ப செல்லும் சூழல் உள்ளது. தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கிரஷர் துாசி, மண் ஆகியவற்றை அள்ளிக் கொண்டு இந்த ரோடு வழியாக செல்கின்றனர். இதனால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

வாகனங்களால் தினசரி விபத்தும், லாரிகள் கவிழ்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இது தொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. விருதுநகர், இருக்கன்குடி, கோட்டூர், சாத்துார் ஆகிய ஊர்களுக்கு குறைவான துாரத்தில் செல்ல இந்த ரோடு வசதியாக உள்ளது. மக்கள் நலன் கருதி, 1 கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X