குடியிருப்புகளை சுற்றிலும் குப்பைக்கூளம் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதால் அபாயம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
விருதுநகர் : ரோடு வசதி, கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதி இல்லாத நிலை, துாய்மை பணியாளர்கள் குப்பையை வாங்காததால் ரோடுகளில் தேங்கும் குப்பை என தினம் தினம் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர் காட்டுமிஷன் பகுதி மக்கள். விருதுநகர் நகராட்சி 36 வது வார்டு காட்டுமிஷன் பகுதியில் இதுவரை ரோடு போடவில்லை. மழை காலங்களில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சாக்கடை வசதி

விருதுநகர் : ரோடு வசதி, கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதி இல்லாத நிலை, துாய்மை பணியாளர்கள் குப்பையை வாங்காததால் ரோடுகளில் தேங்கும் குப்பை என தினம் தினம் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர் காட்டுமிஷன் பகுதி மக்கள்.

விருதுநகர் நகராட்சி 36 வது வார்டு காட்டுமிஷன் பகுதியில் இதுவரை ரோடு போடவில்லை. மழை காலங்களில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளுக்கு முன் உறிஞ்சு குழி அமைத்து அதில் கழிவுநீரை விடுகின்றனர். மழைக்காலங்களில் உறிஞ்சு குழியில் மழை நீர் நிரம்பி கழிவு நீர் செல்ல வழி இல்லாத நிலையில் மக்கள் மோட்டார் மூலம் தொட்டியில் உள்ள கழிவு நீரை தெருக்களில் விடுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த பகுதியில் ஒரு பயன்பாடு இல்லாத கிணறு திறந்த நிலையில் உள்ளது.

கிணற்றிள் குப்பை கொட்டப்பட்டு சுகாதாரகேட்டை பரப்புவதோடு கொசுக்களின் புகலிடமாகவும் உள்ளது. காட்டுமிஷன் பகுதியின் முகப்பில் உள்ள தனியார் ஓட்டல் கழிவுகளை கொட்ட ரோட்டை ஆக்கிரமித்து தொட்டிகளை வைத்து ஆக்கிரமிக்கின்றனர். இந்த பகுதியில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக குப்பை வாங்க வருவதில்லை. என்றாவது ஒருநாள் வந்து வீடுகளில் உள்ள குப்பைகளை மட்டும் வாங்கி செல்கின்றனர். இதனால் தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அப்படியே கிடக்கிறது.

ரோடு வசதி வேண்டும் நாங்கள் 30 ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். ரோடு அமைத்துதர கோரி பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மழை காலங்களில் வயதானவர்கள், பெண்கள் அடிக்கடி ரோட்டில் சறுக்கி விழுகின்றனர். வேதனையாக உள்ளது.முருகன், பருப்பு வியாபாரி.சாக்கடை இல்லாமல் சிரமப்படுகிறோம் கழிவு நீர் வெளியேற சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ரோட்டில் விடும் அவல நிலை நிலவுகிறது. மழை காலங்களில் கழிவுநீர் மழை நீருடன் கலந்து நோய் பரவ காரணமாகிறது.

காமராஜ், வியாபாரம்.குப்பை அகற்றபடுவதில்லை நகராட்சி துாய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் முறையாக குப்பைகளை சேகரிப்பதில்லை. தினமும் குப்பையை வாங்க வராததால் மக்கள் வீட்டிற்கு வெளியில் பைகளில் வைத்து விடுகின்றனர். கால்நடைகள் குப்பைகளை வீதியெங்கும் பரப்பி விடுகின்றன.கலைச்செல்வி, குடும்பதலைவி.நடவடிக்கை எடுக்கப்படும் துாய்மை பணியாளர்கள் மூலம் முறையாக குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.சையது முஸ்தபா கமால், நகராட்சி கமிஷனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X