பொது செய்தி

தமிழ்நாடு

முதல் டிவிஷன் கிரிக்கெட்: காஸ்மோ கலக்கல் வெற்றி

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்ட முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், 'காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி' அணி, 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019---20ம் ஆண்டுக்கான, 'லட்சுமி கார்டு குளோத்திங்' முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 'டர்ப்' மைதானத்தில் நடந்தது. இதில் எஸ்.என்.ஆர்., டிரஸ்ட் அணியும்,

கோவை:கோவை மாவட்ட முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், 'காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி' அணி, 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019---20ம் ஆண்டுக்கான, 'லட்சுமி கார்டு குளோத்திங்' முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 'டர்ப்' மைதானத்தில் நடந்தது. இதில் எஸ்.என்.ஆர்., டிரஸ்ட் அணியும், 'காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த காஸ்மோ வில்லேஜ் அணி, ராஜேஷ் (71), ராஜா ரவி வர்மா (47), ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு, 242 ரன்கள் சேர்த்தது.243 என்ற இலக்கை விரட்டிய எஸ்.என்.ஆர்., டிரஸ்ட் அணி, 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன் மூலம், 70 ரன்கள் வித்தியாசத்தில் காஸ்மோ வில்லேஜ் அணி வெற்றி பெற்றது. 'காஸ்மோ வில்லேஜ்' அணியின் பந்துவீச்சாளர்கள் கருப்புசாமி மற்றும் கவுதம் சிறப்பாக பந்து வீசி, தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X