பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீரின்றி வறண்ட கண்மாய்கள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
கன்னிவாடி : தருமத்துப்பட்டி நீர்த்தேக்க மறுகாலில் நீர் வரத்து இல்லாததால் குக்கிராம நீராதாரங்கள் வறண்டுள்ளன.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் 4 வாரங்களுக்கு முன் ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. குடகனாற்றில் குறிப்பிடத்தக்க தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. வரத்து நீரின் ஒரு பகுதி கருங்குளம், புல்வெட்டிகண்மாய், நடுக்குளம் ஆகிய

கன்னிவாடி : தருமத்துப்பட்டி நீர்த்தேக்க மறுகாலில் நீர் வரத்து இல்லாததால் குக்கிராம நீராதாரங்கள் வறண்டுள்ளன.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் 4 வாரங்களுக்கு முன் ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. குடகனாற்றில் குறிப்பிடத்தக்க தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. வரத்து நீரின் ஒரு பகுதி கருங்குளம், புல்வெட்டிகண்மாய், நடுக்குளம் ஆகிய கண்மாய்களை நிரப்பி மறுகால் செல்கிறது. ஆடலூர், பன்றிமலையின் வரத்து நீரால் தருமத்துப்பட்டி கோம்பை நீர்த்தேக்கம் 2 வாரங்களுக்கு முன் நிரம்பி மறுகால் சென்றது.இருப்பினும் முக்கிய கண்மாய்களான செவனக்கரையான்பட்டி, கதிரவன் குளங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் வரத்து இல்லை. சில இடங்களில் மட்டும் குட்டை போல நீர் தேங்கியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் 5 நாட்களாக மழை இல்லாததால் நீர்த்தேக்க மறுகாலில் நீர் வரத்து குறைந்துள்ளது. அதனால் ஓடைக்கரிசல்பட்டி, வெல்லம்பட்டி, சங்கன் குளம், குட்டத்துப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குக்கிராம நீராதாரங்கள் வறண்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X