பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் சொந்த தேவைக்கு பயன்படும் அரசு வாகனங்கள்; அதிகாரிகளுக்கு தடை வருமா

Added : நவ 15, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : அரசு பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள வாகனங்களை, கொடைக்கானல் ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டு பி.டி.ஓ.,க்கள் உள்ளனர். இங்குள்ள வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதற்காக இருவருக்கும் வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. அவற்றிற்கு மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட அளவில்

கொடைக்கானல் : அரசு பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள வாகனங்களை, கொடைக்கானல் ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டு பி.டி.ஓ.,க்கள் உள்ளனர். இங்குள்ள வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதற்காக இருவருக்கும் வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. அவற்றிற்கு மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் எரிபொருளும் வழங்கப்படுகிறது. பி.டி.ஓ.,க்கள் இங்குள்ள குடியிருப்பில் தங்கி பணிபுரிய வேண்டும். மாறாக இருவருமே தங்குவது இல்லை.

தினமும் அரசு வாகனத்தை தங்கியிருக்கும் தரைப்பகுதிக்கு சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அதனால் வாகனங்களில் தேய்மானம், எரிபொருள் செலவினம் என அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. தினமும் தாமதமாக வரும் அதிகாரிகளால் பணிகள் பாதித்துள்ளன. அனைத்துத்துறை அதிகாரிகளும் இங்கு தங்கி பணிபுரியும் நிலையில் ஒன்றிய அதிகாரிகள் மட்டும் தங்குவதில்லை. இதை கட்டுப்படுத்தும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X