ஆளுங்கட்சினா ரத்தம் இல்லையா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ஆளுங்கட்சினா ரத்தம் இல்லையா?'

Updated : நவ 17, 2021 | Added : நவ 15, 2021
Share
திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பின், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'ஒரு காலத்தில் தக்காளியை சாலையில் கொட்டினர். தற்போது மழைக்காலம் என்பதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. எனினும், மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை
பக்கவாத்தியம்

திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற பின், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'ஒரு காலத்தில் தக்காளியை சாலையில் கொட்டினர். தற்போது மழைக்காலம் என்பதால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. எனினும், மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்கிறோம்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கடந்த ஆட்சியில் வெங்காயம் விலை உயர்ந்த போது, 'விலைவாசி உயர்வு'ன்னு கத்துனாங்க... இப்போது தக்காளி, கிலோ, 120 ரூபாய்க்கு விற்குது... மக்களுக்கு பாதிப்பு இல்லைன்னு சொல்லுறாங்க... எதிர்க்கட்சியாக இருந்தால் ரத்தம்; ஆளுங்கட்சியானால் தக்காளி சட்னியா?' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X