நாக்பூர்-மஹாராஷ்டிராவில் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட 26 பேரில், நக்சலைட் கமாண்டர் ஒருவரின் தலைக்கு மட்டும், 50 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

வன்முறை
மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய தாக்குதலில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் குறித்த விபரங்கள் நேற்று வெளியாகின.இது குறித்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் போலீஸ் என்கவுன்டரில் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 20 பேர் ஆண்கள்; ஆறு பேர் பெண்கள். இதில் 16 பேரின் அடையாளங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
இவர்களில், மூத்த நக்சலைட் கமாண்டரான மிலிந்த் தெல்தும்ப்டேவும் ஒருவர். எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புடைய இவர், பல வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர். இவரை கண்டுபிடித்துக் கொடுப்போருக்கு, 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் கொல்லப்பட்ட நக்சலைட் தளபதிகளான மங்கு போட்யம் தலைக்கு 20 லட்சம் ரூபாயும், சிவாஜி ராவோஜி கோடா தலைக்கு 16 லட்சம் ரூபாயும் வெகுமதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.4 லட்சம் ரூபாய்இதைத் தவிர, கொல்லப்பட்ட ஜெய்மன், கோவாச்சி என்ற இருவருக்கும் தலா 8 லட்சம் ரூபாயும், தெல்தும்ப்டேவின் பாதுகாவலரான பெண் நக்சலைட் மன்சூ போகாவின் தலைக்கு 4 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டிருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.