தமிழ்நாடு

மணலாறு - மகாராஜாமெட்டு ரோடு அமைக்கும் பணி நிறுத்தி வைப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கம்பம் : மணலாறு முதல் மகாராஜாமெட்டு வரை ரோடு அமைக்கும் பணிகள் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுலாதலமான மேகமலையில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. தனியார் தேயிலை தோட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ரோடு தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது. அதன்பின் ரோடு அமைக்கும் பணி ரூ.80 கோடி

கம்பம் : மணலாறு முதல் மகாராஜாமெட்டு வரை ரோடு அமைக்கும் பணிகள் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலாதலமான மேகமலையில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. தனியார் தேயிலை தோட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ரோடு தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது. அதன்பின் ரோடு அமைக்கும் பணி ரூ.80 கோடி மதிப்பீட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.சின்னமனுாரிலிருந்து மேகமலை, ைஹவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு மலைக்கிராமங்கள் உள்ளன.

இதில் சின்னமனுாரிலிருந்து மேகமலை, ைஹவேவிஸ், மணலாறு வரை ரோடு போடப்பட்டுள்ளது. மணலாறிலிருந்து 10 கி.மீ., துாரமுள்ள மகாராஜாமெட்டுக்கு ரோடு போடும் பணிகள் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேகமலை புலிகள் காப்பகமாக மாறியதால் டில்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரைஅனுமதி கிடைக்கவில்லை.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, வெண்ணியாறு போன்ற பகுதிகளை பார்க்க முடிவதில்லை. எனவே ரோடு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் குமணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X