குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்; மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்; மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்பு

Added : நவ 15, 2021
Share
ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தையொட்டி போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் நடந்த ஓவியபோட்டியில் 100க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 6-8ம் வகுப்பு பிரிவில் பிரியதர்ஷினி முதலிடம், தனுஷ்குமார் இரண்டாமிடம், அன்புச்செல்வன் மூன்றாமிடம் பிடித்தனர். 9,10 மாணவர்களுக்கான பிரிவில் ஷாலினி,

ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தையொட்டி போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் நடந்த ஓவியபோட்டியில் 100க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 6-8ம் வகுப்பு பிரிவில் பிரியதர்ஷினி முதலிடம், தனுஷ்குமார் இரண்டாமிடம், அன்புச்செல்வன் மூன்றாமிடம் பிடித்தனர். 9,10 மாணவர்களுக்கான பிரிவில் ஷாலினி, ஜஸ்வந்த், ேஹமாஸ்ரீ ஆகியோரும், 11,12 மாணவர்களுக்கான பிரிவில் சுபாஷ், பாரத், பிருந்தா ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க அறம் கிளையின் செயலாளர் உமர் பாரூக் பரிசு வழங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் விஜயராஜ் காந்தி வாழ்த்தி பேசினார். ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள், சங்க துணைச்செயலாளர் அருண்குமார் செய்திருந்தனர்.* சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு செயலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சோமசுந்தர பாண்டியன் வரவேற்றார்.

விழாவை ஆசிரியர் சரவணன் தொகுத்து வழங்கினார்.* கம்பம் அருகே அண்ணாபுரத்தில் நடந்த விழாவில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் விலங்குராசன் தலைமை வகித்தார். கிராம செவிலியர் மரியா முன்னிலை வகித்தார். விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து சித்தா டாக்டர் சிராசுதீன் பேசினார். நேற்றைய குழந்தைகள் தினவிழாக்களில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X