அமைதிக்கு ஏங்குகிறது கொல்லப்பட்டி சமத்துவபுரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அமைதி'க்கு ஏங்குகிறது கொல்லப்பட்டி சமத்துவபுரம்

Added : நவ 15, 2021
Share
வடமதுரை : கொல்லபட்டி சமத்துவபுரத்தில் குடியேறிய வெளியூர்காரர்களால் பொது அமைதி குறைந்துள்ளது.வடமதுரை ஒன்றியத்தின் முதல் சமத்துவபுரம் அமைக்க 2010 ல் கொல்லப்பட்டி அடுத்த மலை சரிவு தேர்வானது. கட்டுமான பணி முடியும் முன்னரே ஆட்சி மாறியது. சமத்துவபுரம் தி.மு.க.,வின் திட்டம் என்பதால் அ.தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகள் கவனம் செலுத்த தயங்கினர். வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்காமல்

வடமதுரை : கொல்லபட்டி சமத்துவபுரத்தில் குடியேறிய வெளியூர்காரர்களால் பொது அமைதி குறைந்துள்ளது.

வடமதுரை ஒன்றியத்தின் முதல் சமத்துவபுரம் அமைக்க 2010 ல் கொல்லப்பட்டி அடுத்த மலை சரிவு தேர்வானது. கட்டுமான பணி முடியும் முன்னரே ஆட்சி மாறியது. சமத்துவபுரம் தி.மு.க.,வின் திட்டம் என்பதால் அ.தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகள் கவனம் செலுத்த தயங்கினர். வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்காமல் இருப்பது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.இதையடுத்து பயனாளிகள் தேர்வு நடந்து வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. தகுதியற்ற பலரும் வீடுகளை பெற்று கொண்டு அங்கு வசிக்காததால் பல ஆண்டுகளாக பல வீடுகள் பூட்டியே கிடந்தன.

தற்போது பல வீடுகளில் வெளியூர் நபர்கள் வாடகைக்கு குடியேறியுள்ளனர். இவர்களுள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சண்டை, சச்சரவுகள் அதிகரித்துள்ளது.மோர்பட்டி ஊராட்சி தலைவர் சிவசக்தி கூறியது: இங்கு வெளியூர் நபர்கள் குடியேறிய பின்னர் பொது அமைதி குறைந்துள்ளது. வீடு பெற்றவர்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றாத நிலையில் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என ஒன்றிய கமிஷனர்களிடம் கேட்டுள்ளேன். பயனாளிகள் மட்டுமே வசிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X