பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுப்பணியில் சேர்ந்த 18 உபரி ஆசிரியர்கள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : தினமலர் செய்தி எதிரொலியால் சில்வார்பட்டி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 18 உபரி ஆசிரியர்கள் சேர்ந்தனர்.பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் உள்ள இந்த பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை 20 இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்தனர். இதனை போக்க முதன்மை கல்வி அலுவலர், பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி நடவடிக்கை

தேவதானப்பட்டி : தினமலர் செய்தி எதிரொலியால் சில்வார்பட்டி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 18 உபரி ஆசிரியர்கள் சேர்ந்தனர்.

பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் உள்ள இந்த பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை 20 இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்தனர். இதனை போக்க முதன்மை கல்வி அலுவலர், பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி நடவடிக்கை எடுத்தனர்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிக்கு நியமித்தனர். அவர்கள் செல்லவில்லை. இதுபற்றி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதனால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பெரியகுளம் கல்வி மாவட்ட அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக இருந்த 17 ஆசிரியர்கள், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் இருந்து ஒரு ஆசிரியர் என மொத்தம் 18 பேர் சில்வார்பட்டி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டனர். பள்ளியில் புதிதாக பணியில் சேர்ந்த 11 ஆசிரியைகள், 7 ஆசிரியர்கள் ஆகியோரை தலைமையாசிரியர் மோகன், ஆசிரியர்கள் வரவேற்றனர். இன்னும் 2 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X