ரேஷன் கடைகளுக்கு சாக்குகளுக்கு பணம் வழங்காமல் இழுத்தடிப்பு; டி.என்.சி.எஸ்.சி., மீது விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு| Dinamalar

தமிழ்நாடு

ரேஷன் கடைகளுக்கு சாக்குகளுக்கு பணம் வழங்காமல் இழுத்தடிப்பு; டி.என்.சி.எஸ்.சி., மீது விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு

Added : நவ 15, 2021
Share
மதுரை : மதுரையில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு சாக்குகளுக்கான பணத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்(டி,என்.சி.எஸ்.சி.,) ஆறு மாதங்களாக வழங்காமல் இழுத்தடிப்பதாக விற்பனையாளர்கள் குற்றம்சாட்டினர்.இம்மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் கீழ் 800 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு ஜெய்ஹிந்துபுரம், திருமங்கலம், மேலுார், சோழவந்தான்,
ரேஷன் கடைகளுக்கு சாக்குகளுக்கு பணம் வழங்காமல் இழுத்தடிப்பு; டி.என்.சி.எஸ்.சி., மீது விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு

மதுரை : மதுரையில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு சாக்குகளுக்கான பணத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்(டி,என்.சி.எஸ்.சி.,) ஆறு மாதங்களாக வழங்காமல் இழுத்தடிப்பதாக விற்பனையாளர்கள் குற்றம்சாட்டினர்.

இம்மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் கீழ் 800 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு ஜெய்ஹிந்துபுரம், திருமங்கலம், மேலுார், சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட ஆறு டி.என்.சி.எஸ்.சி., கிட்டங்கிகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மூடைகளாக விநியோகிக்கப்படுகின்றன. இப்பொருட்கள் கார்டுதாரர்களுக்கு விநியோகித்த பின் வெற்று சாக்குகள் (சணல் சாக்குகள்) மீண்டும் டி.என்.சி.எஸ்.சி.,க்கு வழங்கப்படும்.

இதற்காக ஒரு சாக்குக்கு ரூ.25 முதல் 27 வரை ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும். இப்பணத்தை 6 மாதங்களாக ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

டி.என்.சி.எஸ்.சி.,முதுநிலை மண்டல மேலாளர் சுகுமார் கூறுகையில், ''இதுதொடர்பாக மேலாளர் தெய்வேந்திரனிடம் விவரம் கேட்டு கொள்ளுங்கள்,” என்றார்.தெய்வேந்திரன் கூறுகையில், “பணம் பட்டுவாடா செய்யும் போது சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான கடிதம் மார்ச்சில் அனுப்பப்பட்டது. அக்.,ல் தான் பதில் கிடைத்தது. நான்கு நாட்களில் பணம் பட்டுவாடா செய்யப்படும்,” என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X