பொது செய்தி

தமிழ்நாடு

குமரியில் குறைந்தது மழை; மக்கள் நிம்மதி; இன்று ஸ்டாலின் ஆய்வு

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
நாகர்கோவில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மழை குறைந்ததால் மக்கள் நிம்மதி மூச்சு விட்டனர். எனினும் தண்ணீரில் சிக்கியுள்ள ஒரு பகுதி மக்கள் மீள முடியாமல் தவிக்கின்றனர்.பாதிப்புகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் இன்று நாகர்கோவில் வருகிறார்.நவ. 11 முதல் குமரி மாவட்டத்தில் மழை கோர தாண்டவம் ஆடியது. கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக பெய்த மழையால் அணைகள் நிரம்பி

நாகர்கோவில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மழை குறைந்ததால் மக்கள் நிம்மதி மூச்சு விட்டனர். எனினும் தண்ணீரில் சிக்கியுள்ள ஒரு பகுதி மக்கள் மீள முடியாமல் தவிக்கின்றனர்.



latest tamil news


பாதிப்புகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் இன்று நாகர்கோவில் வருகிறார்.நவ. 11 முதல் குமரி மாவட்டத்தில் மழை கோர தாண்டவம் ஆடியது. கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக பெய்த மழையால் அணைகள் நிரம்பி கரை ஆறுகளில் புரண்டோடிய வெள்ளத்தால் ரோடுகள் துண்டானது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.சுசீந்திரம், தெரிசனங்கோப்பு, நாகர்கோவில் சக்திகார்டன், ரயில்வே காலனி, வைக்கல்லுார், முஞ்சிறை பார்த்திபபுரம், புதுக்கடை போன்ற பகுதிகளில் மக்கள் படகுகளில் மீட்கப்பட்டனர். 150 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

மாவட்டத்தில் 65 முகாம்களில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்படனர்.சசீந்திரம் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாணுமாலையர் சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. பிரகாரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நேற்று பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியவில்லை.குறைந்ததுநேற்று முன்தினம் இரவு முதல் அணை பகுதிகளில் மழை இல்லை. நேற்று காலை முதல் மாவட்டத்தில் சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்தது. அடிக்கடி லேசான வெயில் அடித்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

எனினும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை.ரயில்கள் ரத்துகன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரயில்பாதையில் நான்கு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு அதில் ஒரு இடம் மட்டும் சரி செய்யப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று மூன்று ரயில்கள் முழுமையாகவும், 11 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டது. கொல்லம்-சென்னை, குருவாயூர் சென்னை விரைவு ரயில்கள் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படுகிறது.நேற்று மாலை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை பகுதிகளில் மழை பெய்யவில்லை. அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.பாதிப்புகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் இன்று நாகர்கோவில் வருகிறார்.


டி.ஜி.பி.ஆய்வு

டி.ஜி.பி. சைலேந்திரபாபு பூதப்பாண்டி, இரணியல், குளச்சல், முஞ்சிறை, நித்திரவிளை, அஞ்சுகிராமம்,சுசீந்திரம், திருப்பதிசாரம்,தோவாளை என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மீட்பு படையினர், போலீசாருக்கு முதலுதவி , துரிதமாக மீட்பது குறித்து ஆலோசனை வழங்கினார். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களை மீட்டு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை முகாம்களில் தங்க வைத்த போலீசாரை பாராட்டினார்.


latest tamil news



கலெக்டருக்கு சபாஷ்

பேச்சிப்பாறை அணையின் உயரம் 48, பெருஞ்சாணி உயரம் 77 அடி. பொதுவாக 43, 72 அடி உயரத்தை தாண்டி விட்டால் உள்வரும் நீர் அனைத்தும் உபரி நீராக திறந்து விடப்படும். நேற்று முன்தினம் மாலையில் மழை நீர், அணை உபரி நீர் என குழித்துறை தாமிரபரணி கரை புரண்டது, இது கடலில் கலக்கும் பொழிமுகம் அருகே உள்ள புதுக்கடை, முஞ்சிறை. பார்த்திபபுரம், வைக்கல்லுார் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரியாக திறக்கப்பட்டது. நள்ளிரவில் இது மேலும் அதிகரித்தால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் நிலவியது. இரவில் மீட்பு பணியிலும் சிரமங்கள் இருந்தது. இந்த நேரத்தில் அணை பகுதிகளில் மழை லேசாக குறைந்தது.இதை பயன்படுத்திய கலெக்டர் அரவிந்த், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை ஐந்தாயிரம் கன அடியாக குறைத்தார்.

இதனால் புதுக்கடை, முஞ்சிறை பகுதிகளில் தேங்கிய தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று காலை பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.67 அடியாகவும் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.55 அடியாகவும் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இது அதிகபட்ச நீர் தேக்கமாகும். பேச்சிப்பாறையில் இரண்டு, பெருஞ்சாணியில் நான்கு அடி கூடுதலாக தண்ணீரை தேக்கியதால் விளவங்கோடு, கிள்ளியூர் தாலுகாவில் ஏராளமான கிராமங்களும், மக்களும் பாதுகாக்கப்பட்டனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
15-நவ-202117:02:05 IST Report Abuse
DVRR என்னாது இது டிவியில் வரவில்லையே "ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு சென்றதால் மழை குறைந்தது என்று டப்பா டப்பா டப்பா அடித்திருக்கும் டிவி ஏன் டப்பா அடிக்கவில்லை???/
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
15-நவ-202113:50:22 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா கோ பேக் ஸ்டாலின் ட்ரெண்ட் ஆகுது.
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
15-நவ-202108:25:00 IST Report Abuse
ஆனந்த் குமரியில் குறைந்தது மழை மக்கள் நிம்மதி இன்று ஸ்டாலின் ஆய்வு //நிம்மதி போச்சே //
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X