பொது செய்தி

தமிழ்நாடு

உலக மக்கள் நலம் பெற அகண்டநாம மகா பஜன்

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:உலக மக்கள் நலம் பெற, ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில், அகண்ட மகா பஜன் மங்கல ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.கோவை ரேஸ்கோர்சில் ஸ்ரீ சத்ய சாய் சேவா மந்திர் உள்ளது. இங்கு உலக மக்கள் நலம் பெற வேண்டி, அகண்ட பஜன் மங்கல ஆரத்தி நிகழ்ச்சியுடன் நேற்று நடந்தது.காலை, 8:00 முதல், 11:00 மணி வரையும், மாலை, 3:00 முதல் 6:00 மணி வரையும் நடந்த இந்த பஜன் நிகழ்ச்சியில், ஏராளமான சாய் பக்தர்கள்

கோவை:உலக மக்கள் நலம் பெற, ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில், அகண்ட மகா பஜன் மங்கல ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.கோவை ரேஸ்கோர்சில் ஸ்ரீ சத்ய சாய் சேவா மந்திர் உள்ளது. இங்கு உலக மக்கள் நலம் பெற வேண்டி, அகண்ட பஜன் மங்கல ஆரத்தி நிகழ்ச்சியுடன் நேற்று நடந்தது.காலை, 8:00 முதல், 11:00 மணி வரையும், மாலை, 3:00 முதல் 6:00 மணி வரையும் நடந்த இந்த பஜன் நிகழ்ச்சியில், ஏராளமான சாய் பக்தர்கள் பங்கேற்றனர்.மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன தலைவர் ராஜ சுப்ரமணியம் கூறுகையில், " உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X