சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியருக்கு வெட்டு: போலீசார் 'எல்லை பஞ்சாயத்து'

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:இடிகரை அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டிய கும்பல், அவரிடமிருந்து மொபைல்போன், பை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்றது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பெரியநாயக்கன்பாளையம், சரவணம்பட்டி போலீசாரிடையே இழுபறி நீடிக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்தவர் சிதம்பரம்,44. கோவை கணபதி, கஸ்தூரிபாய் வீதியில் வசிக்கிறார். இடிகரை

பெ.நா.பாளையம்:இடிகரை அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டிய கும்பல், அவரிடமிருந்து மொபைல்போன், பை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்றது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பெரியநாயக்கன்பாளையம், சரவணம்பட்டி போலீசாரிடையே இழுபறி நீடிக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்தவர் சிதம்பரம்,44. கோவை கணபதி, கஸ்தூரிபாய் வீதியில் வசிக்கிறார். இடிகரை டாஸ்மாக் கடை எண்:1621ல் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, சிதம்பரம் பணியை முடித்துவிட்டு, 9:30 மணிக்கு இடிகரையில் இருந்து சின்னமேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில், இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றவரை, 3 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தி, பணத்தை கொடுக்குமாறு மிரட்டியது.மறுக்கவே, அவரை அரிவாளால் வெட்டி, அவரிடமிருந்த மொபைல் போன், பை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடி சென்றது. காயமடைந்த சிதம்பரம், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், 'புறநகர் பகுதிகளில் பாதுகாப்பற்ற இடங்களில், டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஊழியர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது' என்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சரவணம்பட்டி போலீசார், சம்பவம் நடந்த இடம், தங்கள் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வராது என கூறிவிட்டு, சென்றுவிட்டனர். இதனால், இது தொடர்பாக எங்கு புகார் செய்வது என தெரியாமல், டாஸ்மாக் ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இதனால் நேற்று மாலை வரை, இக்கொள்ளை தொடர்பாக எங்கும் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஒருவர் கூறுகையில், 'இது போன்ற பிரச்னைகளில், சம்பவம் குறித்து, முதலில் தகவல் பெறும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அது தொடர்பான வழக்கை பதிவு செய்து, பின்னர் இது தொடர்பாக உரிய போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கை மாற்றிக் கொள்ளலாம். இந்த விதி நன்கு தெரிந்தும், போலீசார் ஏன் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது மர்மமாக உள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X