பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் 

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில், அனைத்து ஓட்டு சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.இந்த முகாமில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர் சேர்க்க கோரி விண்ணப்பம் கொடுத்தனர். திருத்தம், பெயர் நீக்கம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக

கோவை:கோவை மாவட்டத்திலுள்ள பத்து சட்டசபை தொகுதிகளில், அனைத்து ஓட்டு சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.இந்த முகாமில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர் சேர்க்க கோரி விண்ணப்பம் கொடுத்தனர். திருத்தம், பெயர் நீக்கம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக விண்ணப்பித்தனர்.நிர்மலா மகளிர் கல்லுாரியில் நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை, கோவை கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டார். வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஜெயந்தி, நேற்று மேட்டுப்பாளையத்தில் பார்வையிட்டார்.ஓட்டுசாவடி நிலை அலுவலர்களிடம் தகவல்களை கேட்டறிந்தார். அங்கிருந்த கட்சி முகவர்களிடம் பாரபட்சமற்ற முறையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X