பொது செய்தி

தமிழ்நாடு

நகரம் முழுவதும் சிதறிக்கிடக்குது குப்பை! நாய்கள் கிளறி நகர் முழுவதும் கிடக்குது நாறி

Added : நவ 15, 2021
Share
Advertisement
லட்சுமி நகரில் விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்ட, சீரநாயக்கன்பாளையம், லட்சுமி நகர், வெற்றி பள்ளி அருகில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 11) கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- குணசேகரன், லட்சுமி நகர்.சாலை வசதி இல்லைமாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி ரோடு, ஆர்.ஜே.மெட்ரிக் பள்ளி முன்புறம், அசோக் நகர் லே-அவுட் பகுதியில் சாலை வசதி

லட்சுமி நகரில் விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்ட, சீரநாயக்கன்பாளையம், லட்சுமி நகர், வெற்றி பள்ளி அருகில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 11) கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- குணசேகரன், லட்சுமி நகர்.

சாலை வசதி இல்லைமாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி ரோடு, ஆர்.ஜே.மெட்ரிக் பள்ளி முன்புறம், அசோக் நகர் லே-அவுட் பகுதியில் சாலை வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- குருசாமி, அசோக் நகர்.

குப்பை அள்ளுவதில்லைதடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகர், ராஜலட்சுமி காலனியில், துாய்மை பணி மேற்கொள்ளப்படாததால், சாலையோரம் குப்பை குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராமநாதன், ராஜலட்சுமி காலனி.

சாலையோரம் குவியுது குப்பைசிவானந்தா காலனி, வள்ளுவர் வீதியில், சாலையோரம் குவியும் குப்பை, முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. இப்பகுதி முழுவதும் குப்பை குவிந்துள்ளது.- சுரேஷ், சிவானந்தா காலனி.

விளக்குகள் எரிவதில்லைதிருச்சி ரோடு, ராமநாதபுரம், சுப்பையா தேவர் லே-அவுட்டில் உள்ள, மின் கம்பங்களில் (எண்: 5, 6) விளக்குகள் எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- பாலு, சுப்பையா தேவர் லே-அவுட்.

குப்பை தொட்டியை மாற்றணும்செல்வபுரம், இந்திரா நகரில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி, சிதிலமடைந்து பயனற்று கிடக்கிறது. இதை அகற்றிவிட்டு, புது தொட்டி வைக்க வேண்டும். இதில் கொட்டப்படும் குப்பையை, முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.- வெற்றிவேல் மணி, இந்திரா நகர்.

பி.ஆர்.பி., கார்டனில் துர்நாற்றம்பீளமேடு, பி.ஆர்.பி., கார்டன் பகுதியில், குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது. குவியும் குப்பை முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.- கருப்புசாமி, பி.ஆர்.பி., கார்டன்.

குப்பை தொட்டி வைக்கணும்சிவானந்தா காலனி, இரண்டாவது வீதியில், குப்பை தொட்டி இல்லாததால், வீடுகளின் முன் குப்பை குவிக்கப்படுகிறது. இப்பகுதியில், குப்பை தொட்டி வைக்க வேண்டும்.-சந்திரன், சிவானந்தா காலனி.

மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் அவதிபொள்ளாச்சி ரோடு, சிட்கோ மேம்பாலத்தில் உள்ள மின் கம்பங்களில், பெயரளவுக்கு மட்டுமே விளக்குகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை எரிவதில்லை. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- சதீஷ்குமார், குறிச்சி.

தார் சாலை அமைக்கணும்தீத்திபாளையம், டாக்டர் கந்தசாமி நகரில், தார் சாலை வசதி இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள மண் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்.- ரங்கநாதன், தீத்திபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X