பொது செய்தி

தமிழ்நாடு

போர்க்கால அடிப்படையில் துார்வாரும் பணி; கமிஷனர்

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:''போர்க்கால அடிப்படையில் துார்வாரும், அடைப்புகள் சரி செய்யும் பணிகள் நடக்கிறது,'' என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.கோவை மாநகராட்சியில் சாக்கடைகளில் அடைப்புகள், துார்வாரும் பணிகளில் 'சூப்பர் சக்கர்' எனும் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கருவி மழைநீர் வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க

கோவை:''போர்க்கால அடிப்படையில் துார்வாரும், அடைப்புகள் சரி செய்யும் பணிகள் நடக்கிறது,'' என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.கோவை மாநகராட்சியில் சாக்கடைகளில் அடைப்புகள், துார்வாரும் பணிகளில் 'சூப்பர் சக்கர்' எனும் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கருவி மழைநீர் வடிகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க உதவுகிறது. நேற்று, மாநகராட்சிக்குட்பட்ட சுங்கம் ரோடு, புலியகுளம் விநாயகர் கோவில், பின்புறம் ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்யும் பணியில் சூப்பர் சக்கர் வாகனம் ஈடுபடுத்தப்பட்டது. இப்பணியை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்ய, அதிக திறன் கொண்ட கழிவுநீர் உந்து, அடைப்புகளை சரிசெய்யும் சூப்பர் சக்கர் வாகனம் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாகனம், மணிக்கு, 1,800 லிட்டர் உறிஞ்சும் திறன் கொண்டது. 140 பார் அலகு அழுத்தத்தில் நிமிடத்துக்கு, 480 லிட்டர் வேகத்தில் நீரை செலுத்தும் திறன் அடைப்பு நீக்கி கொண்டது.சேகரமாகும் கழிவு நீரை, மறுசுழற்சி செய்து திரும்ப பயன்படுத்தும் அமைப்பை கொண்டது. மாநகராட்சி பகுதிகளில், போர்க்கால அடிப்படையில், துார்வாரும், அடைப்புகள் சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X