பொது செய்தி

தமிழ்நாடு

‛முதல்வரின் முகவரி' புதிய துறை உருவாக்கம்

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை--'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையை உருவாக்கி, அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகரை நியமித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

சென்னை--'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையை உருவாக்கி, அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகரை நியமித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது. முதல்வர் தனிப்பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர், தனிப்பிரிவில் தற்போதுள்ள பல்வேறு அலுவலக பிரிவு அலுவலர்கள், முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படுவர். மின் ஆளுமை முகமை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின், முதன்மை பொதுகுறை தீர்வு அலுவலர் பதவி, முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர் பதவியுடன் இணைக்கப்படுகிறது.

ஆறு பொது குறை தீர்வு மேற்பார்வை அலுவலர்கள், இனி முதல்வரின் முகவரி துறை, சிறப்பு அலுவலரின் கட்டுப்பாட்டில் செயல்படுவர். தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முகவரி துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகள் வழங்கும் ஒருங்கிணைப்பு துறையாக, பொதுத்துறை செயல்படும்.


latest tamil news


ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்வு மேலாண்மை பிரிவின் இணையதள முகவரி மற்றும் முதல்வரின் அவசர உதவி தகவல் அழைப்பு மையம், '1100' என்ற தொலைபேசி எண் ஆகியவை, மனுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காகவும், தகவல்கள் பெறுவதற்காகவும், மனுக்களை பதிவு செய்வதற்காகவும், இனி முதல்வரின் முகவரி துறையின் கீழ் இயங்கும்.உங்கள் தொகுதியில் முதல்வர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுஉள்ளார். இந்த உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-202120:31:25 IST Report Abuse
சம்பத் குமார் 1). வரவேற்கத்தக்கது.2). சாதி மதம் பார்க்காமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.3). குறிப்பாக அரசாங்கம் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் மீது. நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
15-நவ-202118:50:15 IST Report Abuse
K. V. Ramani Rockfort இந்த முகவரியில் குறைகள் பதிவிட்டு, நண்மை கிட்டினால், இவர் ஒரு நல்ல முதல்வர் என்று ஏற்றுக்கொள்ளலாம்,
Rate this:
Cancel
rajaram padmanabhan - Chennai,இந்தியா
15-நவ-202117:34:56 IST Report Abuse
rajaram padmanabhan Vilathur village located in Thiruthuraipoondi taluk, Thiruvarur District. We are requesting for a road since 14 years from now, but the same not been laid. Made several complaints to CM cell, all are kept pending. Before election, some digging work commenced, but kept as it is and the present road cannot even be used for walking, as it is red sand road, not in quality and as per required width, and laid without removing road side debris and uneven. Also we requested to desilt the two tanks and five small ponds, that also kept pending for over 10 years. Request you to take up the matter on priority and provide the village with a good quality road with culverts over canals and desilt and make the tanks to the usable condition. Thanks and regards........... இந்த புகார் கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியும் எந்த பலனும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X