பொது செய்தி

தமிழ்நாடு

மூளை ரத்தக்குழாய் சிகிச்சையால்மூவரை காப்பாற்றிய டாக்டர்கள் !

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:மூளை ரத்தக்குழாயில் ஏற்பட்ட சிக்கலான வியாதிக்கு, நவீன சிகிச்சை மூலம் மூவரை காப்பாற்றி, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.கோவையை சேர்ந்த கிருஷ்ணவேணி, 48 உடுமலையை சேர்ந்த பொன்னுசாமி, 63 ஆகியோருக்கு, மூளை ரத்தக்குழாயில் உருவான பலுான் போன்ற வீக்கத்தால், வெடிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில்

கோவை:மூளை ரத்தக்குழாயில் ஏற்பட்ட சிக்கலான வியாதிக்கு, நவீன சிகிச்சை மூலம் மூவரை காப்பாற்றி, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.கோவையை சேர்ந்த கிருஷ்ணவேணி, 48 உடுமலையை சேர்ந்த பொன்னுசாமி, 63 ஆகியோருக்கு, மூளை ரத்தக்குழாயில் உருவான பலுான் போன்ற வீக்கத்தால், வெடிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அதே சமயம், மூளையின் முக்கியமான தமனி மற்றும் சிரையில் உள்ள ரத்தம் கலந்து, இடது கண்ணில் வீக்கம் மற்றும் தாங்க முடியாத வலியுடன், கோவையை சேர்ந்த மாரியம்மாள், 38 என்பவரும் அனுமதிக்கப்பட்டார்.மூளை நரம்பியல் சிகிச்சை துறையில் நோயாளிகளை பரிசோதித்த மருத்துவர்கள், நவீன பரிசோதனைகளின் மூலம் நோயின் தன்மையை கண்டறிந்தனர்.மூளை அறுவை சிகிச்சை துறைத்தலைவர் வெங்கடேஷ் தலைமையில், மருத்துவர்கள் குழு மயக்க மருத்து நிபுணர்கள் உதவியுடன், நோயாளிகளின் தொடைப் பகுதியில் ஊசி மூலம் நுண்ணிய குழாய்களை ரத்தக் குழாய் வழியாக மூளைக்கு செலுத்தி, 'காய்லிங்' முறை மூலம் சிகிச்சை அளித்து சரி செய்தனர். அவர்களை, மருத்துவமனை டீன் நிர்மலா பாராட்டினார்.அவர் கூறுகையில், ''இந்த நவீன சிகிச்சை முறை காரணமாக, மண்டை ஓடுப்பகுதியை திறந்து மூளையில் செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சையை தவிர்க்க முடிந்தது.இந்த சிகிச்சை, முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. சிகிச்சை பெற்ற மூன்று நோயாளிகளும், எந்த வித பின் விளைவுகளும் இல்லாமல் நலமாக உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X