கலந்தாய்வுக்கு முன் கவனிக்க கல்வியாளர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலந்தாய்வுக்கு முன் கவனிக்க கல்வியாளர்கள் கோரிக்கை

Added : நவ 15, 2021
Share
கோவை:அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஒரே பாடங்களில் தகுதிபெற்ற மூன்று ஆசிரியர்கள் பணியில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில், 780 அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. விதிமுறைகளின் படி ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளை கையாள நடுநிலைப்பள்ளிகளில் குறைந்தபட்சம் தலைமையாசிரியரை தவிர்த்து, மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க

கோவை:அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஒரே பாடங்களில் தகுதிபெற்ற மூன்று ஆசிரியர்கள் பணியில் இருக்கும் முரண்பாடுகளை களைய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில், 780 அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. விதிமுறைகளின் படி ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளை கையாள நடுநிலைப்பள்ளிகளில் குறைந்தபட்சம் தலைமையாசிரியரை தவிர்த்து, மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.இப்பட்டதாரி ஆசிரியர்கள் கணிதம், அறிவியல், ஆங்கிலம் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் கோவையில் சில நடுநிலைப்பள்ளிகளில், மூன்று ஆசிரியர்களும் கணிதம் அல்லது அறிவியல் படித்தவர்களாக உள்ளனர்.விரைவில் இடமாறுதல் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில், இம்முரண்பாடுகளை களைய கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X