பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா பயிர் காப்பீடு: இன்றே கடைசி நாள்

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை--'சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்ய, இன்றே கடைசி நாள் என்பதால், விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்' என வேளாண் துறை இயக்குனர் சமயமூர்த்தி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு, செப்டம்பர் 15 முதல் நடந்து வருகிறது. இதுவரை 20.9 லட்சம் ஏக்கர் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டு, 10 லட்சம்

சென்னை--'சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்ய, இன்றே கடைசி நாள் என்பதால், விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்' என வேளாண் துறை இயக்குனர் சமயமூர்த்தி கூறியுள்ளார்.



latest tamil news


அவரது அறிக்கை:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு, செப்டம்பர் 15 முதல் நடந்து வருகிறது. இதுவரை 20.9 லட்சம் ஏக்கர் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டு, 10 லட்சம் விவசாயிகள் இணைந்துள்ளனர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், சிவகங்கை, கடலுார், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பயிர்களுக்கான காப்பீடு இன்றுடன் முடிகிறது.


latest tamil news


எனவே, சம்பா பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு சமயமூர்த்தி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-நவ-202106:52:50 IST Report Abuse
 Muruga Vel மழை அதிகமா பெய்தாலோ ..குறைவாக பெய்தாலோ ..நேரம் தவறி பெய்தாலோ ...நேரத்துக்கு பெய்யாமல் இருந்தாலோ ...இழப்பீடு ...
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
15-நவ-202106:15:04 IST Report Abuse
spr காப்பீடு செய்யாதவர்களுக்கு இழப்பீடு கிடையாது என்று சொல்லும் துணிச்சல் வேண்டும் பின்னால் எப்படியும் இழப்பீடு கிடைக்கும் என்ற துணிச்சலிலேயே பலர் காப்பீடு செய்வதில்லை அதற்கு எதிர்க்கட்சிகளும் துணி நிற்கும் என்பது அவர்களுக்குத் தெரியும் இல்லையேல் அரசே அந்தக் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் அதனால் இழப்பீடு காப்பீட்டுக் கழகத்தால் செலுத்தப்பட்டதாகவாவது இருக்கும் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பதுதான் என்றாலும் படிப்படியாக காப்பீடு இல்லையேல் இழப்பீடு இல்லை என்றொரு மனநிலை உருவாக்கப்பட இது உதவும்
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
15-நவ-202116:32:45 IST Report Abuse
pradeesh parthasarathyநீ விவசாயியா ...? நீ என்ன விவசாயம் பண்ற ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X