பொது செய்தி

தமிழ்நாடு

'பழைய அரிசி'ன்னு சொல்லுவாங்க! கவனமா இருக்கணும் மக்களே

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:அரிசியை பழைய அரிசி என்று கூறி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக நிறம் சேர்க்கும் கொடுமை நடக்கிறது. இதை எளிய சோதனையில் கண்டுபிடித்து விடலாம்.உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கண்டுபிடிக்க நவீன தொழில் நுட்பங்கள், தடுப்பதற்கு அதிகாரிகள், தவறு செய்பவர்களை தண்டிக்க சட்டங்கள் இருந்தாலும், கலப்படம் தொடர்ந்து கொண்டே

கோவை:அரிசியை பழைய அரிசி என்று கூறி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக நிறம் சேர்க்கும் கொடுமை நடக்கிறது. இதை எளிய சோதனையில் கண்டுபிடித்து விடலாம்.உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கண்டுபிடிக்க நவீன தொழில் நுட்பங்கள், தடுப்பதற்கு அதிகாரிகள், தவறு செய்பவர்களை தண்டிக்க சட்டங்கள் இருந்தாலும், கலப்படம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம், வாடிக்கையாளர்களின் அறியாமை. மக்களின் முக்கிய உணவுப் பொருளான அரிசியில் செய்யப்படும் கலப்படத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்கின்றனர், உணவு பாதுகாப்புத்துறையினர்.புது அரிசியை காட்டிலும், பழைய அரிசிக்கு டிமாண்ட் அதிகம். மார்க்கெட்டில் விலையும் அதிகம். இதை பயன்படுத்தி காசு பார்க்க நினைக்கும் வியாபாரிகள், புது அரிசியில் மஞ்சள் நிறம் சேர்த்து அதை பழைய அரிசி போல தோற்றத்தை மாற்றி விடுகின்றனர்.எனவே கடையில் பழைய அரிசி என்று சொன்னால், நீங்கள் அதை அப்படியே நம்ப தேவையில்லை. அரிசியில் நிறம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சிறிது அரிசியும், படிகார சாறும் எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை படிகார சாறில் இட்டு நன்கு குலுக்க வேண்டும்.'அரிசி, சிகப்பு நிறமாக மாறினால், கலப்படம் செய்யப்பட்டது. அது நிறம் ஊட்டப்பட்ட அரிசி என்று அர்த்தம். ரசாயன நிறமிகளை பயன்படுத்தி நிறமாற்றம் செய்யப்பட்ட அரிசி, உடலுக்கு கேடு விளைவிக்கும்' என்கின்றனர், உணவு பாதுகாப்புத்துறையினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X