பொது செய்தி

இந்தியா

சாலையில் அசைவ உணவு விற்க தடை

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
ஆமதாபாத்-குஜராத்தின் மூன்று நகரங்களில் சாலையோரத்தில் அசைவ உணவு விற்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆமதாபாத் நகரிலும் தடை கோரப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட

ஆமதாபாத்-குஜராத்தின் மூன்று நகரங்களில் சாலையோரத்தில் அசைவ உணவு விற்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆமதாபாத் நகரிலும் தடை கோரப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news



குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை விற்பனை செய்ய தடை விதித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சாலையோரங்களில் அசைவ உணவு விற்பனை செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆமதாபாதிலும் இந்த உத்தரவை அமல்படுத்தும்படி மாநகராட்சி கமிஷனருக்கு ஆமதாபாத் மாநகராட்சி வருவாய் துறை கமிட்டி தலைவரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜெய்னிக் வக்கீல் கடிதம் எழுதி உள்ளார்.இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பா.ஜ.,வுக்குள்ளேயே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.இது குறித்து குஜராத் மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சில தலைவர்களின் தனிப்பட்ட கருத்தினால் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பில்லை. மாநிலம் முழுதும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



அறிமுகமாகிறது சைவ ரயில்

சைவ உணவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான, இந்திய சாத்விக் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:புனித தலங்கள் மற்றும் கோவில் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களில் முழுமையாக சைவ உணவு பயன்படுத்துவது உறுதி செய்யப்படும். இதற்காக, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்கும் ரயில்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகள், குடிநீர் உட்பட அனைத்தும் சைவ உணவுடன் தொடர்புடையது என சான்றிதழ் வழங்கப்படும். இவற்றில் அசைவ உணவு முற்றிலுமாக தவிர்க்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால் இதை ரயில்வே அமைச்சகம், ஐ.ஆர்.சி.டி.சி., உறுதி செய்யவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-202121:32:44 IST Report Abuse
அப்புசாமி எங்கே என்ன சாப்புட்டாலும் சுத்தத்திற்கு கேரண்டி கிடையாது. ஐ.ஆர்.சி.டி.சி யும் சேத்துத்தான். வீட்டில் இருந்து சமைச்சு எடுத்துக்கிட்டுபோய் சாப்பிடுங்க. ரயில்வே டேசன், பஸ் ஸ்டாண்டுன்னு கண்ட இடத்தில் சாப்புட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
15-நவ-202115:00:18 IST Report Abuse
Vivekanandan Mahalingam தமிழக சாலை ஓரத்தில் செய்யும் எந்த உணவும் சுத்தம் கிடையாது . ஏனென்றால் தண்ணீர் கிடையாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உபயோகிக்கப்படுவதில்லை. மேலும் அந்த உணவு பாத்திரங்களில் ஈ மொய்ப்பது அனைவருக்கும் தெரியும். இந்த அழகில் அசைவ உணவு சமைத்தால் எப்படி இருக்கும் - இந்த அசைவ உணவில் சிலர் எச்சை துப்பி விற்கிறார்களாம் .
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
15-நவ-202114:06:21 IST Report Abuse
Samathuvan இந்தியாவிலேயே அதிகமாக கள்ளச்சாராயம் விற்பது அந்த காந்தி பிறந்த மண்ணில்தான். ஒரு முறையாவது போய் பாருங்கள் தெரியும்.
Rate this:
Gopal - Chennai,இந்தியா
15-நவ-202114:23:04 IST Report Abuse
Gopalகுசராத்து மாடலோ அது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X