தமிழ்நாடு

தற்காலிக தீர்வுகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்: தொலைந்துபோன தொலைநோக்கு பார்வை: 'சின்ன மழைக்கே சின்னாபின்னம்'!

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பூர்:மழைக்காக, மனிதர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் நாட்கள் பல. குடிநீர் கிடைக்காமல் தவிக்கும்போது, திருப்பூர் மக்களிடம், 'மழை பெய்தால் நன்றாக இருக்குமே' என்ற எண்ணம் மேலிடும். ஆனால், மழைக்காலம் துவங்கிவிட்டால், நிலைமை தலைகீழாகும். இதற்கு காரணம், மழை, இயல்பு நிலையை முடங்கச் செய்து விடுகிறது.ஒரு காலத்தில் நுங்கும் நுரையுமாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்ததுதான்
தற்காலிக தீர்வுகளால் ஏமாறும் அப்பாவி மக்கள்: தொலைந்துபோன தொலைநோக்கு பார்வை: 'சின்ன மழைக்கே சின்னாபின்னம்'!

திருப்பூர்:மழைக்காக, மனிதர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் நாட்கள் பல. குடிநீர் கிடைக்காமல் தவிக்கும்போது, திருப்பூர் மக்களிடம், 'மழை பெய்தால் நன்றாக இருக்குமே' என்ற எண்ணம் மேலிடும். ஆனால், மழைக்காலம் துவங்கிவிட்டால், நிலைமை தலைகீழாகும். இதற்கு காரணம், மழை, இயல்பு நிலையை முடங்கச் செய்து விடுகிறது.

ஒரு காலத்தில் நுங்கும் நுரையுமாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்ததுதான் நொய்யல் நதி. நொய்யல் மட்டுமின்றி நல்லாறு, ஜம்மனை என பல்வேறு சிற்றாறுகளும், ஓடைகளும் நிரம்பியிருக்கிற நகரம்தான், திருப்பூர்.ஆனால், நீர் நிலைகள் துார்வாரப்பட்டாலும்கூட, நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, மழைநீர், உரிய முறையில், ஆறுகளையோ, நீர்நிலைகளையோஅடைய முடியாத நிலை நீடிக்கிறது.

சென்னையின் 'கூவம்' போல் பல நேரங்களில், கழிவுநீர் ஆறாகத்தான் நொய்யல் காட்சியளிக்கிறது. தண்ணீர் செல்ல வேண்டிய நதிகள் மற்றும் கால்வாய்களில், கழிவுநீர் செல்கிறது. மழைக்காலங்களில், கழிவுநீர் ததும்பி நிற்கும் சாக்கடை கால்வாய்கள், வழிந்து செல்கின்றன. கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலைகளில் பயணிப்பதால், வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.குடியிருப்புகளுக்குள் தண்ணீர்கழிவுநீர் அகற்றும் வசதி, மழைநீர் வெளியேற்றும் அல்லது சேமிக்கும் வசதி, முறையான சாலை வசதி என்று எத்தகைய அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல், வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் பல இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றன.

பல இடங்களில், நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப்பணிகளும் முழுமை பெறவில்லை.சிறிய மழை பெய்தால் கூட, பல குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்திருப்பதைக் காண முடிகிறது. இதனால், மக்களின் துயரம் அளவிட முடியாதது. வீடுகளுக்குள்ளும், தொழிற்சாலைகளுக் குள்ளும் தண்ணீர் புகுந்து விடுகின்றன. அழகாக கட்டப்பட்ட வீடுகள் இருந்தாலும், மழைநீர் புகும் குளமாக வீடுகள் மாறினால் என்ன செய்வது...!மழைக்காலங்களில், கழிவுநீர் கால்வாய்களைத் துார்வாரி சீரமைத்தல், சாலைகளைச் செப்பனிடுதல் போன்றவை, பல நேரங்களில் 'சடங்காக' செய்யப்படுகின்றன.

பாதியளவு கூட முறையாக நடக்காத பணிகளால், மழைக்காலத்தில், இப்பணிகளின் 'சாயம்' வெளுத்து விடுகிறது.'ஸ்மார்ட் சிட்டி' பணி மந்தம்தொழில் நகரான திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளின் வேகத்தைக் கூட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.சாலை, பாதாளச்சாக்கடை உட்பட, அனைத்துப்பணிகளையும் முடுக்க வேண்டும். மழைநீர் செல்லாமல், குடியிருப்புகள், சாலைகள் செல்ல முடியாத அளவுக்கு மாறியிருப்பதற்கு, இப்பணிகள் அரைகுறையாக நிற்பதும் முக்கியக் காரணம்.ஒரு மேம்பாட்டுப்பணி நடைபெறும் போது, மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். அதற்காக, மக்களின் பணிகளையே முடக்கக்கூடிய அளவு, நிலைமை மோசமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அதிகாரிகளின் கடமை.மழை பெய்யும்போது, மக்கள் பிரதிநிதிகள், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வ தெல்லாம் சரிதான். ஆனால், பல நேரங்களில், இது 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' செய்வதைப் போல் அமைந்து விடுகிறது.

நிர்வாக குளறுபடிகள்

மழை பாதிப்புகளைத் தவிர்க்க முடியாததற்கு நிர்வாக குளறுபடிகளும் காரணமாக அமைகின்றன. மழைநீர் வடிகால் கட்டமைப்பு சிதைந்து போய் இருக்கிறது.மழைநீர் உடனடியாக வெளியேறாமல் ேதங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. வெள்ளம் வழிந்தோடும் வகையிலான கட்டமைப்பு திருப்பூருக்கு இயல்பாகவே உண்டு. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டால் பெருமழை பெய்தாலும், திருப்பூரில் சாலைகளில் தண்ணீர் ேதங்காமல் பாதுகாக்க முடியும்.

மழைக்காலத்திற்கு முன்பு துார்வாரப்பட வேண்டிய கால்வாய்கள் நீர்நிலைகள், ஆறுகளில் மழைக்காலம் துவங்கும்போதுதான் துார்வாரும் பணியே துவங்குகிறது. வடிகால்கள் முறையாக இருந்தாலே தண்ணீர் தேங்காத நிலை உருவாகிவிடும்.நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டதும், திருப்பூரில் உள்ள சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கழிவுநீரை சுத்திகரிக்க துவங்கின.ஆனால், இன்றும், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் செல்கிறது என்றால், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுநீர் செல்வதுதான் முக்கியக் காரணமாக உள்ளது.

ஆற்றிலோ, நீர்நிலையிலோ, கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சிக்கு இருக்கிறது.மழைக்காலம் வரும் முன்பு, வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள், செயல் வடிவம் பெறுகின்றனவா என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.வந்த பின், வெள்ளத்தடுப்புப்பணிகளில் முனைப்பு காட்டி என்ன பயன்? சேதம் அல்லது பாதிப்பின் விளைவை குறைக்கக்கூடிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுவதில்லை.தற்காலிகத் தீர்வுகளில் காட்டப்படும் அக்கறை, நிரந்தர தீர்வுகள் மீது வேண் டும். தற்காலிக தீர்வை நம்பி, மக்கள் ஏமாறக்கூடாது; காட்சிகள், இனியாவது மாற வேண்டும்! தொலைநோக்குப் பார்வை கட்டாயம் தேவை!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
15-நவ-202121:52:27 IST Report Abuse
S. Narayanan முதல்வர் இப்போது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வது எல்லாம் எந்த அளவு மக்களுக்கு பயன் அளிக்கும் என்று சொல்ல முடியாது. என் என்றால் எல்லோரும் தவறு செய்தவர் ஆவார். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுகவுக்கு ஆட்சி நிலைக்காது. அதனால் நிரந்தர தேர்வு என்பதெல்லாம் கிடையாது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயல்.
Rate this:
Cancel
15-நவ-202108:36:43 IST Report Abuse
அப்புசாமி தின்னுட்டு ப்ளாஸ்டிக் பையை தெருவில் வீசுபவர்கள், டீ குடிச்சுட்டு கப்பை சாக்கடையில் போடுபவர்கள், சரக்கடிச்சுட்டு பஸ் ஸ்டாண்டில், தெருவில் உருளுபவர்கள், தனக்கு வேண்டும் போது லஞ்சம், குறுக்கு வழியை நியாயப் படுத்திக் கொள்பவர்கள் இவர்களெல்லாம் அப்பாவி மக்கள் இல்லை. தமிழகத்தில் இருக்குற ஒவ்வொரு ஆளும் இதுக்குள் அடங்குவாங்க. அப்பாவிங்கன்னா, ரெண்டு வயசுக்குட்பட்ட குழந்தைங்கன்னு சொல்லலாம். மூணு வயசுக்கே முழு வளர்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X