ரேக்ளா வண்டியில் மகள் பயணம்:நாட்டு மாடு விழிப்புணர்வு ஏற்படுத்திய தந்தை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேக்ளா வண்டியில் மகள் பயணம்:நாட்டு மாடு விழிப்புணர்வு ஏற்படுத்திய தந்தை

Added : நவ 15, 2021 | கருத்துகள் (1)
Share
பல்லடம்:நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 'ரேக்ளா' வண்டியில் மகளை, விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வந்தார் தந்தை.திருப்பூர் மாவட்டம், மேற்கு பல்லடத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 48; ஒர்க் ஷாப் உரிமையாளர். இமைகள் கண் தான கழகம் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.இவரது மகள் தனுஸ்ரீ, 14, பூப்பு நன்னீராட்டு விழா நடந்தது. மகளை, வீட்டில்
 ரேக்ளா வண்டியில் மகள் பயணம்:நாட்டு மாடு விழிப்புணர்வு ஏற்படுத்திய தந்தை

பல்லடம்:நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 'ரேக்ளா' வண்டியில் மகளை, விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வந்தார் தந்தை.

திருப்பூர் மாவட்டம், மேற்கு பல்லடத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 48; ஒர்க் ஷாப் உரிமையாளர். இமைகள் கண் தான கழகம் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.இவரது மகள் தனுஸ்ரீ, 14, பூப்பு நன்னீராட்டு விழா நடந்தது. மகளை, வீட்டில் இருந்து மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில், என்.எச்., ரோடு, மங்கலம் ரோடு வழியாக, விழா நடந்த மண்டபத்துக்கு அழைத்து சென்றார்.
சுந்தர்ராஜன் கூறுகையில், ''நமது பண்டைய கலாசாரம் பலவற்றை இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.அவ்வகையில், நாட்டு மாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, மாட்டு வண்டியில் மகளை அழைத்து சென்றோம்'' என்றார்.

பூப்பு நன்னீராட்டு விழாவின்போது, செல்வமகள் சேமிப்பு திட்டத் தின் கீழ், 200 பெண் குழந்தைகளின் பெயரில் சேமிப்பு கணக்குகளையும் சுந்தர்ராஜன் துவக்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X