பொது செய்தி

தமிழ்நாடு

அன்றும், இன்றும் அதே நிலை; 'அதோகதி'யில் சுரங்க பாலம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:தலைமை பொறியாளர் ஆய்வு நடத்தி சென்ற பின், அடுத்த கட்ட பணி துவங்காமல் பாலம் அதோ கதியில் விடப்பட்டுள்ளது. மீண்டும் கழிவுநீர் தேங்கும் குட்டையாக பாலம் மாறியுள்ளது.திருப்பூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வளம்பாலம் சாலை - பார்க்ரோடு இடையே சுரங்கபாலம் கட்டும் பணி, 2013ல் துவங்கியது. வெள்ளிவிழா பூங்கா பழைய நுழைவு வாயிலில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை

திருப்பூர்:தலைமை பொறியாளர் ஆய்வு நடத்தி சென்ற பின், அடுத்த கட்ட பணி துவங்காமல் பாலம் அதோ கதியில் விடப்பட்டுள்ளது. மீண்டும் கழிவுநீர் தேங்கும் குட்டையாக பாலம் மாறியுள்ளது.திருப்பூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வளம்பாலம் சாலை - பார்க்ரோடு இடையே சுரங்கபாலம் கட்டும் பணி, 2013ல் துவங்கியது. வெள்ளிவிழா பூங்கா பழைய நுழைவு வாயிலில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை வளர்மதி பாலம் வரை பணி நடந்து, ஒருபுறம் சுரங்க பாலம் அமைக்கப்பட்டு விட்டது.ஆனால், வளம் பாலம், யுனிவர்சல் தியேட்டர் சாலையில் பணி துவங்கவில்லை; நிலம் கையகப்படுத்தவும் இல்லை. எட்டு ஆண்டுகள் கடந்தும் பணி நடக்காத நிலையில், குப்பை கொட்டும் இடமாக சுரங்க பாலம் மாறியது. மழை பெய்தால், மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி துர்நாற்றம் வீசியது.கடந்த அக்டோபர் கடைசி வாரம் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றும் வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் குழு, 'எம்.ஜி.ஆர்., சிக்னல் அருகே ஏன் பாலம் பணி தாமதமாகிறது' என்பது குறித்து, பத்து நாட்களுக்குள் அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர். அப்போது சரியென அதிகாரிகளும் தலையாட்டினர். தற்காலிகமாக அங்கிருந்து கழிவுநீர் உறிஞ்சப்பட்டது. குப்பைகளும் அகற்றப்பட்டது. தீபாவளி விடுமுறையில் அதிகாரிகள் சென்று விட்டனர்.இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக திருப்பூரில் பெய்த மழையால் நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், மழைநீர், கழிவுநீர் கலந்து மீண்டும் சுரங்கபாலத்தில் நான்கு அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. இதனால், சுற்றுச்சுவர் பலவீனம் அடைந்து வருகிறது. தலைமை பொறியாளர் ஆய்வு நடத்தி, அதிகாரிகள் அறிக்கை தந்த பின், அடுத்த கட்ட பணி நடக்காமல் பாலம் அப்படியே விடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், கழிவுநீர் தேக்கத்தால், சுற்றுச்சுவர் பலமிழந்து நொய்யல் ஆற்றில் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பாக அதிகாரிகள் விழிக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X