பொது செய்தி

தமிழ்நாடு

நுால் விலை உயர்வு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:மா.கம்யூ., கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு, கட்சி அலுவலகத்தில் கூடியது.மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பருத்தி நுால் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. நுால் விலை, கிலோவுக்கு 50 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.மூலப்பொருட்கள் விலை உயர்வால், ஒட்டுமொத்த ஜவுளித்துறையும்

திருப்பூர்:மா.கம்யூ., கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு, கட்சி அலுவலகத்தில் கூடியது.மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பருத்தி நுால் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. நுால் விலை, கிலோவுக்கு 50 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.மூலப்பொருட்கள் விலை உயர்வால், ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் பாதிக்கப்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ஜவுளி தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த, தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி, திருப்பூர் குமரன் சிலை அருகே, 19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X