போலீசார் அச்சுறுத்துகின்றனர் பெண் பத்திரிகையாளர்கள் புகார்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அகர்தலா-திரிபுரா போலீசார் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்து மிரட்டுவதாக, இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.மதக்கலவரம்இங்குள்ள கோமதி மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சமீபத்தில் பேரணி நடத்தினர். அப்போது, காக்ரபன் என்ற இடத்தில் உள்ள மசூதி தாக்கப்பட்டதாக வதந்தி
 போலீசார் அச்சுறுத்துகின்றனர் பெண் பத்திரிகையாளர்கள் புகார்

அகர்தலா-திரிபுரா போலீசார் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்து மிரட்டுவதாக, இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.மதக்கலவரம்இங்குள்ள கோமதி மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சமீபத்தில் பேரணி நடத்தினர். அப்போது, காக்ரபன் என்ற இடத்தில் உள்ள மசூதி தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து திரிபுராவில் பதற்றம் நிலவியது. இந்த விவகாரத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வெறுப்புணர்வை துாண்டி மதக்கலவரத்தை சிலர் துாண்டுவதாக மாநில அரசு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

.'கோமதி மாவட்டத்தில் மசூதி சூறையாடப்பட்டதாக வெளியான செய்தி போலியானது' என, மாநில அரசு தெரிவித்துஉள்ளது.இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா ஆகியோர் இரு வேறு பிரிவினர் இடையே மதக்கலவரத்தை துாண்டிவிடுவதாக விஷ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்த கஞ்சன் தாஸ் போலீசில் புகார் அளித்துள்ளார்.இதன் அடிப்படையில் இரு பெண் பத்திரிகையாளர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.'நோட்டீஸ்'தாங்கள் தங்கியுள்ள ஓட்டல் அறைக்கு, 15க்கும் மேற்பட்டு போலீசார் வந்து அச்சுறுத்துவதாகவும், ஓட்டல் அறையை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாகவும் பெண் பத்திரிகையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப் பட்டது.போலீஸ் தரப்பு கூறுகையில், 'பெண் பத்திரிகையாளர்கள் மீதான புகாரின் அடிப்படையில் அவர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, 'நோட்டீஸ்' அளிக்கவே ஓட்டல் அறைக்குச் சென்றோம். ''அவர்கள் அவகாசம் கேட்டதை அடுத்து, வருகிற 21ல் ஆஜராகுமாறு தெரிவித்துவிட்டு திரும்பினோம்'' என, கூறப்பட்டது.மஹாராஷ்டிராவில் அமைதிதிரிபுராவில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக வதந்தி பரவியதை அடுத்து, மஹாராஷ்டிராவில் நாந்தேட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்ல முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் பேரணி நடந்தது.

இதில் வன்முறை நடந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பு பொது சொத்துகள் சேதமடைந்தன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பதற்றம் நிலவியதால் நாந்தேட் மாவட்டத்தின் பல பகுதிகளில், ௧௪௪ தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பதற்றம் நிலவினாலும், நந்தேட் பகுதியில் அமைதி நிலவுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அம்ராவதி பகுதியிலும் அமைதி நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X