பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கன மழை, வெள்ளம் அணை பகுதிகளில் எச்சரிக்கை

Updated : நவ 15, 2021 | Added : நவ 15, 2021
Share
Advertisement
பத்தினம்திட்டா-கேரளாவில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. முக்கிய அணைகள் திறக்கப்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில்

பத்தினம்திட்டா-கேரளாவில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. முக்கிய அணைகள் திறக்கப்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக பாய்கிறது.எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


நீர் வரத்து அதிகரித்துள்ளதால் இடுக்கியில் உள்ள அணை நேற்று திறந்து விடப்பட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 140 அடியை எட்டிஉள்ளதால் நீர்வரத்து அதிகரித்தால் திறந்து விடப்படும் என, தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதனால் அணையை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தினம்திட்டா மாவட்டத்திலும் கன மழை பெய்து, பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைச் சரிவு ஏற்படும் வாய்ப்புஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X