மரக்கன்று எடுத்து வர நீண்ட பயணம்: விவசாயிகள் அதிருப்தி

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:விவசாய நிலங்களில், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் உள்ளிட்ட பல்வகை மரக்கன்றுகளை நடும் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.மாவட்டம் முழுக்க, தாலுகா வாரியாக மரக்கன்றுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம், 2.60 லட்சம் மரக்கன்றுகள் பெறப்பட்டு, தாராபுரம் வனச்சரக

திருப்பூர்:விவசாய நிலங்களில், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் உள்ளிட்ட பல்வகை மரக்கன்றுகளை நடும் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.மாவட்டம் முழுக்க, தாலுகா வாரியாக மரக்கன்றுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம், 2.60 லட்சம் மரக்கன்றுகள் பெறப்பட்டு, தாராபுரம் வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.மரக்கன்று பெற விரும்பும் விவசாயிகள், ''மொபைல்போனில், 'உழவர் செயலி' மூலம், பெயரை பதிவு செய்ய வேண்டும். பின், அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து ஒப்புகை சான்று பெற்று, தாராபுரம் சென்று மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்'' என, அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் சிலர் கூறுகையில், ''இலவசமாக மரக்கன்று வழங்கப்பட்டாலும், இதை எடுத்து வர பல கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியுள்ளது. உடுமலை, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தாராபுரம் சென்று வர, 100 கி.மீ., துாரத்துக்கும் மேல் பயணிக்க வேண்டும். இதனால், போக்குவரத்து செலவும், நேர விரயமுமே ஏற்படும். அவ்வளவு தொலைவு சென்று, மரக்கன்றுகளை எடுத்து வரும் போது, அவை சேதமடையும் வாய்ப்பும் உள்ளது. மரக்கன்று எடுத்துவர பொருளாதார ரீதியாகவும் சிக்கல் உள்ளது.அந்தந்த தாலுகாவில் ஏதேனும் ஒரு இடத்தில், இவற்றை வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X